👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
அமெரிக்காவில் உள்ள ஏராளமான நிறுவனங்களில் பணியாளர்களைவிட, சி.இ.ஓ.,க்கள் 278 மடங்கு அதிகமான ஊதியத்தை பெறுவதாகவும், இவ்வாறு பணியாளர்களுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் இடையேயான ஊதிய வேறுபாடு தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், எக்னாமிக் பாலிசி இன்ஸ்டிடியுட் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
சி.இ.ஓ.,க்கள் அதிகமான ஊதியம் பெறாவிட்டாலும் எந்த பிரச்னையும் ஏற்பட போவதில்லை. ஆனாலும், சி.இ.ஓ.,க்களுக்கான ஊதியம் பெருமளவு அதிகரிப்பதற்கு, அவர்களது திறன்கள் தொடர்ந்து மேம்பாடுவதால் அல்ல; மாறாக, அவர்களுக்கான ஊதியத்தை அவர்களே நிர்ணயம் செய்யும் அளவிற்கு ஆளுமையை பெற்றுள்ளதே காரணம்.
இத்தகைய சக்தியை உயர் பொறுப்பில் உள்ளவர்கள் பெற்றிருப்பதும், வேறுபாடு தொடர்ந்து உயர்ந்து வருவதும், நாட்டில் சமமற்ற நிலையையே அதிகரிக்கிறது என்று அந்த ஆய்வு மேலும் தெரிவிக்கிறது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U