மதியம் 2 - 3 மணிக்குள் 20 நிமிட தூக்கம் உடலுக்கு நல்லதா?ஆய்வு ரிப்போர்ட் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 27, 2019

மதியம் 2 - 3 மணிக்குள் 20 நிமிட தூக்கம் உடலுக்கு நல்லதா?ஆய்வு ரிப்போர்ட்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
மதிய நேரத்தில் 20 நிமிட தூக்கம் மனிதனின் உடலையும், மூளையையும் சுறுசுறுப்பாக்குவதாக இங்கிலாந்து மருத்துவர் ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளார். நீல் ஸ்டேன்லி என்ற மருத்துவர் தூக்கத்தைப் பற்றிய ஆய்வு மேற்கொண்டார். போதிய உறக்கமின்றி தவிப்பதும், நன்றாக குடித்து விட்ட வாகனம் ஓட்டுவதும் ஒன்று என ஏற்கெனவே குறிப்பிட்ட அவர் தற்போது மதிய நேர தூக்கம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தன்னார்வலர்களை அழைத்து குறிப்பிட்ட இடைவெளிகிளில் மாறி மாறி ஒளிரும் மின் விளக்கை அணைக்கச் சொல்லும் விளையாட்டில் அவர்களை ஈடுபடுத்தினார்.
பின் அவர்களை இருட்டு அறையில் தூங்கச் செய்து, பின் எழுப்பி மீண்டும் அதே விளையாட்டை ஆடச் செய்தார். அதன்படி 20 நிமிடம் நன்றாகத் தூங்கியவர், எதிர்வினையாற்றும் நேரம் அதிகரித்திருந்ததும், அவர்களின் உடலும், மூளையும் சுறுசுறுப்படைந்திருந்ததையும் கணக்கிட்டுள்ளார். ஆனால் 20 நிமிடத்துக்கும் மேல் உறங்கியவர்கள் மந்தமாக இருந்ததையும் அந்த ஆய்வில் மருத்துவர் நீல் ஸ்டேன்லி சுட்டிக்காட்டுகிறார். காஃபி அருந்தினால் 30 நிமிடம் சுறுசுறுப்படையும் மனிதர், உடல் சோர்வுறும் மதியம் 2 மணி முதல் 3 மணி வரைக்குட்பட்ட நேரத்தில் 20 நிமிடம் மட்டும் தூங்கி எழுந்தால் அடுத்த 3 முதல் 4 மணி நேரம் வரை சுறுசுறுப்போடு பணியாற்றுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews