பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் செய்ய ரேஷன் கார்டு குறைதீர் முகாம் : 17 இடங்களில் நாளை நடக்கிறது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 09, 2019

பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் செய்ய ரேஷன் கார்டு குறைதீர் முகாம் : 17 இடங்களில் நாளை நடக்கிறது

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம் சென்னையில் 17 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் நாளை நடைபெறுகிறது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ரேஷன் கார்டில் மாற்றம் செய்தல் மற்றும் பொது விநியோக திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து தமிழகம் முழுவதும் வட்டங்கள் வாரியாக மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படுகிறது. அதன்படி, மக்களின் குறைகளை கேட்டு தீர்வு காணும் பொருட்டு இந்த மாதத்திற்கான பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம், சென்னையில் உள்ள 17 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.
குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் செல்போன் எண் பதிவு செய்தல் போன்ற மாற்றங்களையும், பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்கள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இந்த முகாமில் தெரிவிக்கலாம். இந்த குறைகளை விரைந்து சரி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னையில் உள்ள 17 மண்டல அலுவலக பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது கோரிக்கைக்கு தீர்வு காணலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews