புதிய தோற்றத்தில் அசத்தும் twitter-ன் புதிய அம்சங்கள் என்ன? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 20, 2019

புதிய தோற்றத்தில் அசத்தும் twitter-ன் புதிய அம்சங்கள் என்ன?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பிரபல இடுகை செயலியான twitter, தனது வடிவமைப்பு, சிறப்பம்சங்களில் மாற்றங்களை ஏற்படுத்தி டெஸ்க்டாப் வெர்ஷனுக்கு புதியதொரு தோற்றத்தை அளித்துள்ளது! சமூக வலைதளங்களில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் வரிசையில் பெரும் வரவேற்பு பெற்ற தளம் ட்விட்டர். 240 எழுத்துகளுக்குள் உலக நிகழ்வுகளை இணைய சேவை வழியாக உலகறிய செய்யும் இந்த ட்விட்டர் தற்போது தனது பயனாளர்களை கவர்வதற்காகவும், பயன்படுத்த எளிதாகவும் பல புதிய அம்சங்களை புகுத்தியுள்ளது. அந்த வகையில் தற்போது டெஸ்க்டாப் வெர்ஷனுக்கு புதிய தோற்றத்தை அளித்துள்ளது, மேலும் சிறப்பம்சங்களையும் இணைத்துள்ளது. முக்கிய ட்விட்களை புக் மார்க் செய்துகொள்ளும் வசதி, பயன்படுத்தும் போது கண்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க டார்க் மோட் வசதி, லைட்ஸ் அவுட் வசதி, ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. எக்ஸ்புளொர் (Explore) மூலம் ட்ரெண்டிங்கை எளிதாக அறியும் வசதியும் கொண்டுவரப்பட்டுள்ளது.
முன்பு கவர் புகைப்படங்களுக்கு ஏற்ப வண்ணங்கள் மாறுவது போல இருந்தது. ஆனால் தற்போது மஞ்சள், சிவப்பு, ஊதா, ஆரஞ்ச், பச்சை என வண்ணங்களை மாற்றும் வசதியும் உள்ளது. அதேவேளையில் தற்போது கனடாவில் மட்டும் ட்விட்டர் ரிப்ளையை மறைக்கும் வசதியை சோதனையாக கொண்டு வந்துள்ளது. தேவையற்ற ரிப்ளையை பயனாளர்கள் லாக் செய்து கொள்ளலாம். அதே போல் ரிப்ளையை படிக்க விரும்புபவர்கள் அன்லாக் செய்து படிக்கவும் வசதியும் புகுத்தி உள்ளது. இந்த புதிய அப்டேட்ஸ் குறித்து ட்விட்டர் தெரிவிக்கையில்., பயனாளர்கள் மற்றும் பின் தொடர்பவர்கள் இருவருக்கும் சமவாய்ப்பை கொடுக்கும் விதமாக இது இருக்கும் என தெரிவித்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews