👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவிற்கு அரசு பள்ளிகளில் பல்வேறு திட்டங்களை கொண்டுவர உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகரில் அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளிக்கல்வித்துறைக்கு சிறந்த திட்டங்களை முதல்வர் அறிவித்திருப்பதாக கூறினார். தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவிற்கு பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்படும் என்றும், அரசு பள்ளிகளில் நடப்பாண்டில் கூடுதலாக 2 லட்சம் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், அடுத்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் 5 லட்சம் மாணவர்களை கூடுதலாக சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.
தனியார் பள்ளிகள் மீதான மோகம் மாறி, அரசுப் பள்ளிகளில் அதிக அளவில் மாணவர்கள் சேரும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகள் இசை, நடனம், யோகா போன்றவை மூலம் பெற்றோர்களை தங்கள் பக்கம் ஈர்ப்பதாகவும், இவைகள் அனைத்தும் அரசு பள்ளிகளில் வாரத்திற்கு ஒரு நாள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதற்காக ஆசிரியர்கள் தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். அதுமட்டுமல்லாது, அரசுப் பள்ளி மாணவர்களின் ஆங்கில திறனை வளர்க்கும் வகையில் எல்கேஜி, யுகேஜி மாணாக்கர்களுக்கு தமிழோடு சேர்ந்து ஆங்கிலமும் கற்பிக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அனைத்து பள்ளிகளுக்கும் பாடப் புத்தகங்கள் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது என்றும், 2017-18ல் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு 3 மாதத்தில் மடிக்கணினி வழங்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U