நீட் தேர்வு விலக்கு கோரும் மசோதாக்கள் நிராகரிப்பு: மத்திய அரசு தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 08, 2019

நீட் தேர்வு விலக்கு கோரும் மசோதாக்கள் நிராகரிப்பு: மத்திய அரசு தகவல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரும் தமிழக அரசின் சட்ட மசோதாவை மத்திய அரசு நிராகரித்துவிட்டதாக, சென்னை ஐகோர்ட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது நீர் தேர்வில் இருந்து விலக்கு அளிக்குமாறு தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அதனை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தி சென்னை ஐகோர்ட்டில் பெற்றோர் ஆசிரியர் கழகம் உள்ளிட்ட 4 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். மருத்துவ படிப்பில் சேர்வதற்கான, நீட் நுழைவு தேர்வுக்கு விலக்கு கோரும் வகையில், தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட, இரண்டு சட்ட மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், மத்திய அரசு தெரிவித்துள்ளது.இதையடுத்து, மசோதாக்களை பெற்ற மற்றும் நிராகரிக்கப்பட்ட தேதி விபரங்களை, மனுவாக தாக்கல் செய்யும்படி, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக மாணவர்கள் - பெற்றோர் நலச் சங்கத்தின் தலைவர், அருமைநாதன் தாக்கல் செய்த மனு: மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேர்க்கையை ஒழுங்குபடுத்தும் விதமாக, &'நீட்&' என்ற, தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வை, மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. நீட் தேர்வில், தமிழக மாணவர்களுக்கு, விலக்கு பெறும் வகையில், இரண்டு சட்ட மசோதாக்களை, ௨௦௧௭ல், தமிழக சட்டசபை நிறைவேற்றியது. இதற்கு, கவர்னரின் ஒப்புதல் பெறப்பட்டது.பின், ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு, 2017 பிப்ரவரியில் அனுப்பப்பட்டது. ஐந்து மாதங்கள் ஆகியும், இன்னும் மத்திய அரசிடம் இருந்து, பதில் இல்லை.இந்த மசோதாக்களுக்கு, அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளில் சேர, ஏழை, எளிய மாணவர்களுக்கு வசதி இல்லை.சட்ட மசோதாக்களுக்கு உரிய நேரத்தில் ஒப்புதல் கிடைத்திருந்தால், மாணவி அனிதாவுக்கு, மருத்துவ படிப்பில் இடம் கிடைத்திருக்கும்.தற்போது, ஒப்புதல் கிடைக்க தாமதம் ஏற்படுவதால், மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டு உள்ளது.
எனவே, ஜனாதிபதியின் ஒப்புதல் பெறுவதற்கான நடைமுறைகளை பூர்த்தி செய்யும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.இதுபோன்று, பிரின்ஸ் கஜேந்திரபாபு, கனகசுந்தரம், முஸ்தபா ஆகியோரும், தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். மனுக்கள், நீதிபதிகள், எஸ்.மணிகுமார், சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய,&'டிவிஷன் பெஞ்ச்&' முன், நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தன.மத்திய அரசு சார்பில், வழக்கறிஞர், ஆதி.குமரகுரு ஆஜராகி, &'&'மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து, கடிதம் வந்துள்ளது. &'&'அதில், தமிழகத்தில் இருந்து, 2017 பிப்ரவரியில், இரண்டு சட்ட மசோதாக்கள் வந்தன. அவற்றை, 2017 செப்டம்பரில், ஜனாதிபதி நிறுத்தி வைத்துள்ளார் என, கூறப்பட்டுள்ளது,&'&' என்றார்.மேலும், &'&'மசோதாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதா; நிராகரிக்கப்பட்டனவா என, விளக்கம் கோரியதற்கு, அந்த மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது,&'&' என்றும், தெரிவித்தார். அதற்கான கடிதங்களையும், நீதிபதிகளிடம் தாக்கல் செய்தார்.மத்திய அரசு வழக்கறிஞர் குறிப்பிட்டதை பதிவு செய்த நீதிபதிகள், மசோதாக்கள் பெறப்பட்ட விபரங்கள் மற்றும் நிராகரிக்கப்பட்ட தேதி விபரங்களை, மனுவாக தாக்கல் செய்யும்படி, மத்திய உள்துறை அமைச்சக செயலருக்கு உத்தரவிட்டனர். விசாரணையை, வரும், 16 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்திருந்தன. அதில், '' அடுத்த நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் சட்ட மசோதாவை நிராகரித்தது குறித்த தகவலை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 6) தெரிவித்தது மத்திய அரசு. ஆனால் ஐகோர்ட், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரும் மசோதாவை நிராகரித்தது எப்போது என்கிற விவரத்தை அளிக்குமாறு, மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதில், சட்ட மசோதாக்கள் பெறப்பட்ட விபரம், நிராகரித்த தேதி உள்ளிட்ட முழுமையான விபரங்களை வரும் ஜூலை 16 க்குள் தாக்கல் செய்யுமாறு, அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews