👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கடந்த சில நாட்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் வீட்டில் இருந்து பணிபுரிந்த பெண்ணுக்கு பென்ஷன் வழங்க உத்தரவிட்டுள்ளது உச்சநீதி மன்றம்.
ஆமாங்க.. இந்த தீர்ப்பு பலரிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதோடு, இது வீட்டிலிருந்து பணிபுரியும் அனைவருக்கும் உதவும் என்றும் கூறப்படுகிறது.
கார்மென்ட்ஸ் என்று கூறப்படும் ஆயத்த ஆடையகம் நாடெங்கிலும் பரவலாக காணப்படுகிறது. இது போன்ற நிறுவனங்களில் பல பெண்கள், தற்போதும் வீட்டிலிருந்து பணிபுரிந்து கொண்டு தான் உள்ளார்கள். ஆனால் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு கிடைக்கும் சலுகைகள், இவர்களுக்கு கிடைப்பதில்லை.
அவர்கள் வீட்டிலிருந்து சொந்தமாக மெஷின் வைத்து தைப்பதால் அவருக்கு ஊழியர் என்ற அந்தஸ்தையும் அந்த குறிப்பிட்ட நிறுவனங்கள் தருவதில்லை. ஊழியர்களுக்கு வழங்கப்படும் எந்தவொரு சலுகையும் இது போன்ற பணியாளர்களுக்கு தருவதில்லை. மாறாக அவர்கள் மீது பல குற்றங்களைச் தான் சுமத்துகிறது.
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் நாட்டில் இதுபோன்ற தொழிற்சாலைகளில் நேரடியாக பணிபுரிவோர் எண்ணிக்கை 1.2 கோடி பேர் ஆகும். இதுவே வீட்டிலிருந்து பணிபுரிவோரின் எண்ணிக்கை இதைவிட பல மடங்கு இருக்கிறது என்றும், கலிபோர்னியா பல்கலைக் கழகம் ஒரு அறிக்கையில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் கண்ணுக்கு தெரியாத ஊழியர்கள் லட்சக் கணக்கில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் கோதாவரி கார்மென்ட்ஸ் என்ற நிறுவனத்தில், வீட்டிலிருந்து பணி புரிந்த ஒரு பெண், தனக்கு ஓய்வூதியம் தர வேண்டும் என்று அந்த நிறுவனத்தை அந்த பெண் கேட்டுள்ளார். ஆனால் அந்த நிறுவனம் இதை மறுக்கவே அவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
இந்த நிலையில், அந்த தனியார் நிறுவனம் இவ்வாறு வீட்டிலிருந்து பணிபுரியும் பெண்களை ஊழியர்களாக கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. அதிலும் அவர்கள் மேலாளரின் கண்கானிப்பு இல்லாமல் பணிபுரிகின்றனர். இதனால் இதை கணக்கில் வைத்து கொள்ள முடியாது என்றும் மறுத்துள்ளதாம். அதோடு இவ்வாறு வீட்டிலிருந்து தைக்கப்படும் பல துணிகள் தவறான தையல் காரணமாக அது எங்களுக்கு வீணாகிறது என்றும் அந்த நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளதாம்.
அபராதம் ரூ.10 லட்சம்
எனினும் இந்த பிரச்சனை கலந்து ஆலோசித்த பின்பு உச்ச நீதிமன்றம், பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு 10 லட்சம் ரூபாய், வழக்கு செலவு தொகை மற்றும் பென்ஷனாக கொடுக்க வேண்டும் என்றும் தீர்பளித்துள்ளது. இந்த நிலையில் இந்த தீர்ப்பு சமூக ஆர்வலர்கள் தரப்பில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதோடு, இதன் மூலம் வீட்டில் பணிபுரியும் அனைவருக்கும், இதன் மூலம் நல்ல பலன் அடைய வாய்ப்புள்ளதாகவும் கருதப்படுகிறது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U