பொறியியல் படிப்புக்கு ஆன்லைன் பொது கலந்தாய்வு இன்று தொடக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 03, 2019

பொறியியல் படிப்புக்கு ஆன்லைன் பொது கலந்தாய்வு இன்று தொடக்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இன்ஜினியரிங் கலந்தாய்வு கடந்த ஆண்டு முதல் இணையதளம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மே 2ம் தேதி முதல் 31ம் தேதி வரை 1 லட்சத்து 33 ஆயிரம் மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பித்தனர். சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின், 1 லட்சத்து 4 ஆயிரம் மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றனர். இவர்களுக்கான ரேண்டம் என் ஜூன் 3ம் தேதி வெளியிடப்பட்டது. ஜூன் 17ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. ஜூன் 25 முதல் 28ம் தேதி வரை முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கும் பிளஸ் 2வில் தொழிற்கல்வி படித்த மாணவர்களுக்கும் சென்னையில் நேரடி கலந்தாய்வு நடந்தது. இதைத்தொடர்ந்து, இன்று முதல் தரவரிசை பட்டியல் அடிப்படையிலான இணையவழி கலந்தாய்வு நடை பெற உள்ளது. அதன்படி, தரவரிசை பட்டியலில் முதல் ரேங்க் முதல் 9,872 ரேங்க் வரை பெற்றவர்கள் தங்களுக்கான விருப்பக்கல்லூரியை தேர்வு செய்யலாம். இன்று முதல் ஜூலை 10ம் தேதிக்குள் மாணவர்கள் தங்களின் விருப்பக்கல்லூரிகள் பட்டியலை இன்ஜினியரிங் கவுன்சிலிங் இணையதளத்தில் உள்ளீடு செய்ய வேண்டும் . 42 இன்ஜினியரிங் கலந்தாய்வு உதவி மையங்களிலும் மாணவர்கள் விருப்பக்கல்லூரி பட்டியலை உள்ளீடு செய்யலாம். ஜூலை 11ம் தேதி மாணவர்களுக்கான சீட் ஒதுக்கீடு செய்யப்படும். அந்த கல்லூரிகளில் சேருவதை மாணவர்கள் ஜூலை 12ம் தேதி மாலை 5 மணிக்குள் உறுதிபடுத்த வேண்டும். ஜூலை 13ம் தேதி இறுதி சீட் ஒதுக்கீடு செய்யப்படும். அதில் கல்லூரி தேர்வு செய்யாத மாணவர்கள் அடுத்த சுற்று கலந்தாய்வில் பங்கேற்கவும் தகுதி பெறுவார்கள். ஜூலை 28ம் தேதிக்குள் 4 சுற்றுக்களாக கலந்தாய்வு நடத்தி முடிக்க தொழில்நுட்ப கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது. இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்போர், நாளை முதல், ஆன்லைனில் கட்டணம் செலுத்தலாம் .அண்ணா பல்கலை இணைப்பு கல்லுாரிகளில், இன்ஜினியரிங் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு, தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் சார்பில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்த மாணவர்களில், விளையாட்டு பிரிவினர், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் மற்றும் தொழிற்கல்வி பிரிவினருக்கு, கவுன்சிலிங் முடிந்தது.பொதுப்பிரிவினருக்கு, ஆன்லைன் கவுன்சிலிங் நடவடிக்கைகள், நாளை துவங்க உள்ளன. இதில், 1.01 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். அவர்களுக்கு, 'கட் - ஆப்' மதிப்பெண் அடிப்படையில், நான்கு கட்டங்களாக கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.முதல் சுற்றில், 200 முதல், 178 வரை, கட் - ஆப் மதிப்பெண் பெற்ற, 9,872 பேர் பங்கேற்கின்றனர்.
இவர்களுக்கான கவுன்சிலிங் கட்டணம் செலுத்தும் வசதி, நாளை ஆன்லைன் வாயிலாக துவங்குகிறது. ஜூலை, 10, மாலை, 5:00 மணிக்குள் கட்டணம் செலுத்த வேண்டும். விருப்ப பாடம் மற்றும் கல்லுாரிகளை, ஆன்லைனில் பதிவு செய்யும் அவகாசம், வரும், 8ல், துவங்க உள்ளது; 10ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும். ஜூலை, 11ல் இடங்கள் ஒதுக்கப்படும்; 12ம் தேதிக்குள் உறுதி செய்து, இறுதி ஒதுக்கீட்டை பெறலாம். கூடுதல் விபரங்களை, www.tneaonline.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews