👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
list சென்னையில் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை புதன்கிழமை வெளியிடும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன். உடன் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் பாலச்சந்திரன்,
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு தருமபுரியைச் சேர்ந்த மாணவி அதில் முதலிடம் பிடித்துள்ளார்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டு கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புகளுக்கு (பிவிஎஸ்சி- ஏ.ஹெச் / பி.டெக்) 460 இடங்கள் உள்ளன.
இந்த நிலையில், 2019-2020-ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே மாதம் 8-ஆம் தேதி தொடங்கி ஜூன் 17 -இல் நிறைவடைந்தது. அதில், பிவிஎஸ்சி - ஏஹெச் படிப்புக்கு 15,666 மாணவர்களும், பி.டெக் படிப்புக்கு 2,772 மாணவர்களும் விண்ணப்பித்திருந்தனர்.
சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. அவை நிறைவடைந்த நிலையில், தரவரிசைப் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது.
வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் அப்பட்டியலை மாநில கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வெளியிட்டார். அந்த நிகழ்வின்போது துறைச் செயலாளர் கே.கோபால், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சி.பாலச்சந்திரன், பதிவாளர் பி.தென்சிங் ஞானராஜ், மாணவர் சேர்க்கைக் குழுத் தலைவர் கே.என்.செல்வகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
முதலிடம் பிடித்த மாணவி: பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி எஸ்.ஸ்வாதி (கட்-ஆப் மதிப்பெண் - 199.50) முதலிடம் பிடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி எ.ஜேன் சில்வியா (கட்-ஆப் மதிப்பெண் - 199.25) இரண்டாம் இடத்தையும், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி எம்.ஹர்சா (கட்-ஆப் மதிப்பெண் - 199) மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
அதேபோன்று, பி.டெக் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஜி.லட்சுமி பிரியதர்ஷினி (கட்-ஆப் மதிப்பெண் - 197.25) முதலிடத்தையும், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஆர்.ஜஸ்வர்யா (கட்-ஆப் மதிப்பெண் - 196.50) இரண்டாம் இடத்தையும், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் கே.எம்.சுரேஷ் (கட்-ஆப் மதிப்பெண் - 195.25) மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
முன்னதாக தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு செய்தியாளர்களிடம் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
மாநிலத்தின் பெரும் பகுதி மக்கள், ஊரகப் பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். வேளாண்மையும், கால்நடை வளர்ப்புமே அவர்களது பிரதானத் தொழிலாக இருந்து வருகிறது. அவற்றை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் கடந்த ஆண்டு 125 கால்நடை மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளன.
அடுத்து வரும் ஆண்டுகளில் அதைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் மருத்துவமனைகள், மருந்தகங்களைத் திறக்க திட்டமிடப்பட்டு வருகிறது.
நாட்டு விலங்கினங்களைப் பாதுகாக்கும் நோக்கில் 1,800 ஏக்கர் பரப்பளவில் சின்ன சேலத்தில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா ஒன்றை அமைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவின் ஒக்லஹாமா பல்கலைக்கழகத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, அந்நாட்டிலிருந்து 6 மாணவர்கள் பயிற்சிக்காக தமிழகம் வந்துள்ளனர். இதேபோல், தமிழக மாணவர்கள் 4 பேர் பயிற்சிக்காக அமெரிக்கா செல்ல உள்ளனர் என்றார் அவர்.
மூன்றாம் வாரத்தில் கலந்தாய்வு: நிகழ்ச்சியில் துணைவேந்தர் சி.பாலச்சந்திரன் கூறுகையில், தரவரிசைப் பட்டியல்
www.tanuvas.ac.in மற்றும்
www2.tanuvas.ac.in ஆகிய இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது; கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 3-வது வாரத்தில் நடைபெறும்; அதற்கான தேதி உள்ளிட்ட விவரங்கள் ஓரிரு நாளில் வெளியிடப்படும் என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U