கைதியின் குழந்தைக்கு கல்வி உதவி! மாவட்ட ஆட்சியரின் அசத்தல் முயற்சி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 08, 2019

கைதியின் குழந்தைக்கு கல்வி உதவி! மாவட்ட ஆட்சியரின் அசத்தல் முயற்சி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கல்வி என்பது அனைவருக்கும் பொதுவானது தான், ஆனால் அந்தக் கல்வி எல்லோருக்கும் சமமாக கிடைக்கிறதா என்றால் அது கேள்விக் குறிதான். அதே வேளையில் வசதியின்மையால், தவிர்க்கமுடியாத சூழ்நிலையால் பல குழந்தைகள் கல்வி கற்க இயலாமலும், கல்வியை தொடர முடியாமலும் தவித்து வருகின்றனர், இருப்பினும் இதேபோன்று தவித்து வரும் குழந்தைகள், சில நல் உள்ளங்களின் உதவியால் சாதனை படைத்த கதைகளும் இருக்கதான் செய்கின்றன. அப்படி ஒரு முயற்சியைதான் பிலாஸ்பூர் கலெக்டர் செய்துள்ளார். பிலாஸ்பூர் மாவட்டத்தின் கலெக்டர் சஞ்சய் குமார் அலாங் இவர் அந்த மாவட்டத்தின் மத்திய சிறைச்சாலையில் உள்ள கைதிகளை வருடாந்திர ஆய்வு செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது ஒரு குழந்தை பெண் கைதிகளுடன் சுட்டித்தனமாக விளையாடி கொண்டிருந்தது. இதைப் பார்த்த சஞ்சய், அதிகாரிகளிடம் குழந்தைப் பற்றி விசாரிக்க, குழந்தையின் தந்தை தண்டனை அனுபவித்து வருவதாகவும், தாய் மஞ்சள் காமாலை நோயால் இறந்துவிட்டதாலும், குழந்தையை சிறையிலே வளர்க்க அனுமதி பெற்று கைதி வளர்த்து வருவதாக தெரிவித்துள்ளனர். இதை கேட்ட சஞ்சய் உடனே விளையாடிய கொண்டிருந்த குழந்தையை அன்பாய் அழைத்துப் பேசியுள்ளார். அவரது கணிவான பேச்சு குழந்தைக்கு பிடித்து போக, குழந்தையிடம் சஞ்சய் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டுள்ளார், அதற்கு அந்தக் குழந்தை தான் படிக்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளது. இதை கேட்டு நெகிழ்ந்து போன சஞ்சய் ஆய்வு முடித்த கையோடு, குழந்தைப் பள்ளியில் படிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டார்.
தற்போது அந்தக் குழந்தை தினமும் பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்புடன் மகிழ்ச்சியோடு சென்று வருகிறது. இது மட்டுமில்லை அந்தக் குழந்தை 12 ஆம் வகுப்பு வரை எவ்வித தடையின்றி படிப்பதற்கு கலெக்டர் சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்து பிலாஸ்பூர் சிறைக்காப்பாளர் திஜ்ஜா கூறுகையில் ' 'சில சமயங்களில் கர்ப்பிணி பெண்கள் கைதாகி தண்டனை அனுபவிக்கும் போது சிறையிலேயே குழந்தை பிறந்துவிடும் சூழல் உருவாகும் என்றும் அந்த சமயங்களில் தாயிக்கும் குழந்தைக்கும் தேவையான அனைத்து தேவைகளும் சிறையில் பூர்த்தி செய்யப்படும் என்றும் கூறினார். மேலும் அந்தக் குழந்தைகள் தாயுடன் ஆறு வயது வரைதான் இருக்க முடியுமென்றும் ஆனால் இந்த குழந்தையை பொருத்தவரையில் தாயும் இறந்து விட்டதால்சிறையிலேயே தந்தையுடனே வசிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாகவும்'' தெரிவித்தார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews