காமராஜர் விருதுக்கு மாணவர் பட்டியல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 23, 2019

காமராஜர் விருதுக்கு மாணவர் பட்டியல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
காமராஜர் விருதுக்கான, சிறந்த மாணவர் பட்டியலை தயார் செய்ய, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ் வழியில், பொதுத்தேர்வு எழுதி, தேர்ச்சி பெறும் சிறந்த மாணவருக்கு, இரண்டு ஆண்டுகளாக, காமராஜர் விருது வழங்கப்படுகிறது. பத்தாம் வகுப்பில், 15 பேர், பிளஸ் 2 வகுப்பில், 15 பேர் என, ஒரு மாவட்டத்திற்கு, 30 பேர் வீதம் தேர்வு செய்யப்படுவர்.பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, தலா, 10 ஆயிரம் ரூபாய், பிளஸ் 2 மாணவர்களுக்கு, 20 ஆயிரம் ரூபாயும் பரிசுத்தொகை வழங்கப்படும். விருது பெற தகுதியான அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவர்கள் பட்டியலை, மாவட்டந்தோறும் தயார் செய்யுமாறு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி, 'தகுதியான மாணவர்களின் பெயரை, பள்ளியிலிருந்து பெற்று, இதற்கென அமைக்கப்பட்ட துணைக்குழு மூலம் ஆய்வு செய்து, தகுதியுள்ள மாணவர்களின் பெயர்களை பரிந்துரைக்க வேண்டும்.'இறுதியாக, மதிப்பெண் வாரியாக, பட்டியல் தயார் செய்து, 25ம் தேதிக்குள், தொழில் கல்வி இணை இயக்குனரிடம் முதன்மை கல்வி அலுவலர்கள் ஒப்படைக்க வேண்டும்' என, உத்தரவிடப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews