இதயெல்லாம் கவனிங்க.. உங்க பாலிசி இதனால கூட க்ளைம் செய்ய முடியாமல் போகலாம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 08, 2019

இதயெல்லாம் கவனிங்க.. உங்க பாலிசி இதனால கூட க்ளைம் செய்ய முடியாமல் போகலாம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
என்னதான் வங்கிகளில் டெபாசிட் செய்தாலும், சில ஆயுள் காப்பீடு, ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகள், மோட்டார் வாகன பாலிசிகள் என்பது நம்மையே நாம் திடப்படுத்திக் கொள்வது போல் தான். அதிலும் அடித்து பிடித்து பல ஆயிரம் கட்டியும் இன்ஷூரன்ஸ் பாலிசிகளுக்கு க்ளைம் செய்யும் போது நீங்கள் இதை சரியாக செய்யவில்லை. இதனால் உங்கள் இன்ஷூரன்ஸ் க்ளைம் செய்ய முடியாது என்றால் எப்படி இருக்கும். ஆக ஒரு பாலிசி எடுக்கும் போதும் சரி, பிரிமியம் செலுத்தும் போதும் சரி இந்த மாதிரியான விஷயங்களை சரி செய்து கொள்வது மிக அவசியம். அது உங்களுக்கும் சரி, உங்களை சார்ந்தோருக்கும் மிக நல்லதே. எதிர்பாராத சூழ்நிலைகளால் நமது துணைகளுக்கு நாம் ஆதரவு கரம் இப்படியும் நீட்டலாம். ஆமாங்க.. இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமேயானால், ஆயுள் காப்பீடு போட்டுள்ளவர்கள், அவர்கள் துரதிஷ்டவசமாக இல்லா விட்டாலும், இந்த பாலிசிகள் மூலம் அவர்களுக்கு ஒரு வகையில் உதவ முடியும். ஆனால் பாலிசி போடும் போது சில நேரங்களில் நாம் நம்மை அறியாமையில் செய்த தவறு கூட மிகப்பெரிய இழப்பைக் கொடுக்கலாம்.
ஒரு பாலிசியை எடுக்கும் போது, வழங்கப்படும் தகவல்கள் உண்மையானதாக இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக மருத்துவ வரலாற்றை மறைப்பது மிகப்பெரிய தவறு. அதோடு நீங்கள் தவறான தகவல்களை வழங்கினால், அது பின்னர் உங்கள் பாலிசி முதிர்விலோ, அல்லது க்ளைம் செய்யும் போதோ நிராகரிக்க வழி வகுக்க கூடும். பாலிசி எடுக்கும் முன்னர் ஒருவருக்கு புகை பிடிக்கும் பழக்கம் இல்லாமல் கூட இருக்கலாம். ஆனால் இது பாலிசி எடுத்த பின்னர் கூட பழகிக் கொள்ளலாம். இதில் கவனிக்க பட வேண்டிய விஷயம் என்னவெனில், புகைப்பிடிப்பவர்களுக்கான இன்ஷூரன்ஸ் பிரீமியம் அதிகம். இதனாலேயே சிலர் பாலிசி எடுக்கும் போது இதை கூறுவது இல்லை. இதனால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு பதில், உங்களது இன்ஷூரன்ஸ் பாலிசியில் உண்மையை கூறுங்கள் என்று கூறுகின்றன இன்ஷூரன்ஸ் நிற்வனங்கள். இது பின்னர் க்ளைம் செய்யும் போது இது உங்களுக்கு பிரச்சனையை உருவாக்கலாம். ஏன் புகைப்பிடிப்பதால் உருவாகும் பிரச்சனைகளுக்கு க்ளைம் செய்ய முடியாமல் கூட போகலாம் என்கிறது சில நிறுவனங்கள்.
நீங்கள் வாகனம் ஓட்டிச் செல்லும் போது அல்லது எதிர்பாராத தருணங்களில் வாகன விபத்துகளில் துரதிஷ்டவசமாக நீங்கள் மரணமடைந்தாலோ, அந்த நேரத்தில் நீங்கள் மது அருந்தியதால் தான் இந்த விபத்து என்று நிரூபிக்கப்பட்டால் இன்ஷூரன்ஸ் க்ளைம் செய்ய முடியாது என்பதை கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். அதோடு வாகன ஓட்டிகள் சட்டத்தின் விதிகளை மீறி வாகனம் ஓட்டிச் சென்று, விதிகளை மீறி இறந்தாலும், அவர்களுக்கு இன்ஷூரன்ஸ் பாலிசி க்ளைம் செய்ய முடியாது. இதனால் பாதிக்கப்பட போவது உங்களது குடும்பமே. நீங்கள் ஒரு வேளை இந்தியாவில் இன்ஷூரன்ஸ் எடுத்துவிட்டு, அயல் நாட்டில் குடிபெயர்ந்தால் அதை கட்டாயம், இன்ஷூரன்ஸ் நிறுவனங்களிடம் தெரியபடுத்த வேண்டும். பாலிசி எடுத்துள்ளவர் ஒரு வேளை பயங்கராவாத தாக்குதல்களால் பாதிக்கப்பட்டால் அதற்கு இன்ஷூரன்ஸ் கிடையாது. ஒரு வேளை மனிதாபிமான அடிப்படையில் கொடுத்தால் தவிர இன்ஷூரன்ஸ் க்ளைம் இதற்கு கிடையாதாம்.
இயற்கை பேரழிவுகளால் ஏற்படும் சுனாமி, வெள்ளப்பெருக்கு, பூகம்பம் உள்ளிட்டவற்றால் நேரும் எதிர்பாராத மரணத்துக்கு, இன்ஷூரன்ஸ் க்ளைம் செய்ய முடியாதாம். ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் என்று இன்ஷூரன்ஸ் நிறுவனம் கண்டறிந்தால், அந்த நபர் தான் குற்றவாளி இல்லை என்று நீருபிக்கப்படும் வரை காப்பீட்டு கோரிக்கை நிராகரிக்கப்படும் அல்லது க்ளைம் நிறுதப்படுமாம். ஆக இன்ஷூரன்ஸ் க்ளைம் செய்யாததற்கு இப்படியும் சில காரணங்கள் உண்டு கவனித்துக் கொள்ளுங்கள்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews