மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 50 கோடி மெகா மோசடியில் ஈடுபட்டவர்கள் சிக்கியது எப்படி? பரபரப்பான தகவல்கள் அம்பலம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 05, 2019

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 50 கோடி மெகா மோசடியில் ஈடுபட்டவர்கள் சிக்கியது எப்படி? பரபரப்பான தகவல்கள் அம்பலம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மதுரை காமராஜர் பல்கலைக்கழத்தில் மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே, தொலைதூர கல்வி மூலம் பட்டம் படித்ததற்கான மதிப்பெண் சான்றிதழ் கொடுக்கப்பட்டிருப்பதாக சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகத்தில், தேர்வாணையர் உள்ளிட்ட சிலர் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. மாணவர்களிடம் ரூ.1 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு, பட்டியலில் மாணவர்கள் பெயரை வரச் செய்திருக்கின்றனர். மாணவர்கள் பற்றிய விபரங்களும் திருத்தி எழுதப்பட்டிருக்கின்றன. இப்படி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் தரப்பட்டிருக்கிறது. லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில், மாணவர்களின் முகவரி, புகைப்படம், தொலைபேசி எண் போன்றவை பல்கலைக்கழக ஆவணங்களில் இல்லை என்பதும், மாணவர்கள் சேர்க்கைக்கான பதிவுக்கட்டணம் கட்டாததையும் வங்கிகள் தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கேரள மாநிலம், கொல்லம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல்கலைக்கழக மையங்கள் முன்னின்று, இந்த ஊழலை நடத்தி இருப்பதுடன், இதற்கு தேர்வுத்துறை கூடுதல் கட்டுப்பாட்டு அதிகாரி ராஜராஜன், தொலைதூர கல்வி துறையில் பணிபுரியும் கார்த்திகைசெல்வன், கண்காணிப்பாளர் சத்தியமூர்த்தி ஆகியோரின் பங்கு முக்கியமாக இருந்திருக்கிறது. இவர்கள் மதிப்பெண் பட்டியல்களையே முறைகேடாக மாற்றியுள்ளனர். கார்த்திகைசெல்வன் கம்ப்யூட்டர் சர்வரில் பாஸ்வேர்டை தவறாக பயன்படுத்தி, மாணவர்களின் தகவல்கள் முழுவதையும் மாற்றியமைத்துள்ளார். இதில் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மதிப்பெண் போடுவது, பதிவு கட்டணம் கட்டாதவர்களுக்கு பணம் கட்டியதாக போலி வங்கி காசோலை எண்களை பதிவிடுவது உள்ளிட்ட வேலைகளைச் செய்ததாக கூறப்படுகிறது.
இதில் மாணவர்களிடம் இருந்து பணம் பெறும் புரோக்கர் வேலையை கேரளாவை சேர்ந்த நிஜி, சுரேஷ், ஜெயப்பிரகாசம், அப்துல் அஜீஸ் செய்துள்ளனர். ஏற்கனவே அதிகாரி ராஜராஜனை பதவி நீக்கம் செய்யும்படி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக பாதுகாப்பு கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் விசாரணைகள் இழுத்தடிக்கப்பட்டு வந்தன. குற்றம் சாட்டப்பட்ட மூவர் உள்ளிட்ட 7 பேருக்கு மோசடியில் தொடர்பிருப்பது தெரிந்தும், அரசியல் பலத்தினால் எந்த நடவடிக்கைகளும் இவர்கள் மீது எடுக்கப்படவில்லை. தற்போது, லஞ்ச ஒழிப்புத்துறையினரின் கிடுக்கிப்பிடி விசாரணையும், கைது நடவடிக்கைகளும் அடுத்தடுத்த பரபரப்பை ஏற்படுத்தும் சூழலைக் கொடுத்திருக்கிறது.
‘ராயல்’ பி.காம் பிரிவில்... மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இருந்து, சென்னை லஞ்ச ஓழிப்புத்துறை அதிகாரிகளுக்கு கடந்த ஜூன் 19ம் தேதி புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் சார்பில் விசாரணை நடத்த ஜூன் 26ல் சிண்டிகேட் குழு அமைக்கப்பட்டுள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 2014 முதல் 2017 வரை நடந்த மாபெரும் ஊழலில், ‘ராயல் பிரிவு’ என்று வர்ணிக்கப்படும் பி.காம் (வணிகவியல்) துறை பாடப்பிரிவில் மட்டுமே அதிகளவில் மாணவர்கள் சேர்க்கையுடன் முறைகேடு நடந்திருக்கிறது. பி.காம் படிப்பு சேர்க்கைக்கான கடைசி நாளில் மட்டும் சுயவிவரங்களான புகைப்படம், பெற்றோர் பெயர், முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள் இல்லாமல் மொத்தம் 6,895 மாணவர்கள் சேர்க்கை நடந்திருக்கிறது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews