👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டில், எம்பிபிஎஸ் சீட் வழங்கக் கோரிய வழக்கில் நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், இடைகோடு, தொட்டத்துவிளையைச் சேர்ந்த கிருஷ்ணநாயர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி மத்திய அரசு சட்ட திருத்தம் செய்துள்ளது. எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வில் 320 மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளேன். இதர வகுப்பினர் (ஓசி) பிரிவில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் எம்பிபிஎஸ் சீட் கேட்டிருந்தேன்.
எம்பிபிஎஸ் படிப்பிற்கான கவுன்சலிங் துவங்க உள்ள நிலையில், இதுவரை எனக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. தமிழகத்தில், மத்திய அரசின் சட்ட திருத்தம் பின்பற்றப்படவில்லை என தெரிகிறது. இதனால் எனது மருத்துவ கனவு பறிபோகிறது. எனவே, மத்திய அரசின் 10 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் எனக்கு சீட் வழங்கவும், இதற்காக ஒரு எம்பிபிஎஸ் சீட் காலியாக வைத்திருக்கவும், கவுன்சலிங் மூலம் தேர்வு மற்றும் சேர்க்கை நடைமுறைகளை மேற்கொள்ள தடை விதித்தும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், மனு குறித்து இந்திய மருத்துவ கழக செயலர், தமிழக சுகாதாரத்துறை செயலர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்தார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U