👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான வசதிகளை செய்து கொடுக்காத புகாரில் மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டதை எதிர்த்து தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் தொடர்ந்த வழக்கில், கலந்தாய்வில் பங்கேற்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி உள்ள ஜெயமாதா பொறியியல் கல்லூரி நிர்வாக அலுவலர் சார்பில் தாக்கல் செய்த மனு நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கல்லூரி நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே. துரைசாமி, ஏ.ஐ.சி.டி.இ. விதிகள் படி, குறைபாடுகளை 3 மாதத்தில் நிவர்த்தி செய்திட கல்லூரி நிர்வாகம் உத்தரவாதம் அளிக்கிறது என்று தெரிவித்தார்.
இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, ஏ.ஐ.சி.டி.இ. சுட்டிக்காட்டிய குறைகளை மூன்று மாதத்தில் நிவர்த்தி செய்திட வேண்டும் என்றும், இல்லையேல், கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டார்.
இக்கல்லூரியை கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்றும் மாணவர் சேர்க்கையானது, ஏ.ஐ.சி.டி.இயின் நடவடிக்கைக்கு உட்பட்டது என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த விசயத்தை, கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U