பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, June 07, 2019

பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்! இதுகுறித்து ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவள்ளுர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறும் நோக்கில் 36 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 19 பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளும், 17 மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளும் அடங்கும். மாணவர்களுக்கான விடுதிகள், திருவள்ளூர், பேரம்பாக்கம், கனகம்மாசத்திரம் பூண்டி, கே.ஜி.கண்டிகை, வங்கனூர், பாலாபுரம், செங்காட்டனூர், ஆர்.கே.பேட்டை, அத்திமாஞ்சேரி பேட்டை, பொதட்டூர்பேட்டை, நெடியம், சுண்ணாம்புகுளம், பழவேற்காடு, பெரியபாளையம், மாதவரம், திருவொற்றியூர், ஆவடி, வெள்ளியூர், கொப்பூர், பாதிரிவேடு, மணவாளநகர், கீச்சலம், கேசவராஜகுப்பம் மற்றும் பண்ணூர் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன. மாணவிகளுக்கான விடுதிகள் திருவள்ளூர், கீழச்சேரி, திருவாலங்காடு, திருத்தணி, மாதர்பாக்கம், ஆரம்பாக்கம், பூந்தமல்லி, ஊத்துக்கோட்டை, பொதட்டூர் பேட்டை மற்றும் பழவேற்காடு ஆகிய பகுதிகளில் இயங்கி வருகிறது. திருத்தணியில் ஒரு பிற்படுத்தப்பட்டோர் நல அரசுக் கல்லூரி மாணவர் விடுதி இயங்கி வருகிறது.
இந்த விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளும், கல்லூரி விடுதியில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவர்களும் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர். இந்த விடுதிகளில் தங்கிப் பயில்வோருக்கு ஆரோக்கியமான உணவும், தங்கும் வசதியும் அரசால் கட்டணமின்றி வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், மாணவ, மாணவிகளின் பொது அறிவை வளர்க்கும் நோக்கில் தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களும், புத்தகங்களும் வழங்கப்பட்டு வருகின்றன. மாணவர்கள் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறும் நோக்கில் சிறப்பு வழிகாட்டிப் புத்தகங்கள், 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நான்கு இணை சீருடைகள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், மாணவ, மாணவிகளுக்கு போதிய இட வசதியுடன் தலையணைகள், கோரைப்பாய், போர்வைகள் வழங்கப்படுகின்றன. மாணவ, மாணவிகளின் உடல் நலத்தைப் பாதுகாக்கும் வகையில் மூன்று கட்ட இலவச மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த விடுதியில் சேர பெற்றோர் மற்றும் பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். அதேபோல், இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையம் குறைந்த பட்சம் 8 கி.மீ. தூரத்துக்குள் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவிக்கு பொருந்தாது. மேற்படி விடுதியில் சேரத் தகுதியுடைய மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதிக் காப்பாளர், காப்பாளினிகளிடமிருந்து அல்லது ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ கட்டணமின்றி பெற்றுக் கொள்ளலாம். நிகழ் கல்வியாண்டில், மாணவ, மாணவிகள் அரசின் சலுகைகளைப் பெற்று பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான விடுதிகளில் தங்கி கல்வி பயின்று பயனடையலாம்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews