ஆதார் அட்டையில் இருக்கும் உங்கள் புகைப்படத்தை மாற்றுவது எப்படி! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 06, 2019

ஆதார் அட்டையில் இருக்கும் உங்கள் புகைப்படத்தை மாற்றுவது எப்படி!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
Photo Update: ஆதார் அட்டையில் இருக்கும் உங்கள் புகைப்படத்தை மாற்றுவது எப்படி!? அன்றாட பணிகளில் முக்கியத்துவம் வாய்ந்த ஆவணமாக கருதப்படும் ஆதார் அட்டையில், புகைப்படத்தை மாற்றுவது எப்படி என்று இங்கே காணலாம். ஒவ்வொரு குடிமகனின் அடையாளத்திற்காகவும் இந்திய அரசு வழங்கியுள்ள ஆவணம் ஆதார் அட்டை. இதில் தனிப்பட்ட நபர்களின் பயோமெட்ரிக் டேட்டா, டெமோகிராபிக் தகவல்கள் இடம்பெற்றிருக்கும். இது நமது அன்றாட பணிகளில் மிக முக்கியமான ஆவணமாக விளங்குகிறது.
வங்கி பணப் பரிவர்த்தனை, சிம் கார்டு வாங்குதல், கேஸ் இணைப்பு பெறுதல், பிறப்பு சான்றிதழ் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கும் ஆதார் அட்டை அவசியமாகிறது. இதில் இடம்பெற்றிருக்கும் தனி நபரின் புகைப்படம், சில சமயங்களில் தெளிவான தோற்றத்தில் இல்லாமல் இருக்கக் கூடும் அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் ஆதார் புகைப்படம் பிடிக்காமல் போய் விடலாம். அதுபோன்ற சூழல்களில் ஆதார் அட்டை புகைப்படத்தை எப்படி மாற்றுவது என்று இங்கே தெரிந்து கொள்ளலாம். ஆஃப்லைனில் ஆதார் அட்டை புகைப்படத்தை மாற்றம் செய்வது எப்படி: * அருகிலுள்ள ஆதார் சேவை மையத்திற்கு செல்ல வேண்டும்
* அங்கு அதிகாரப்பூர்வ UIDAI இணையதளத்தில் இருந்து, படிவம் ஒன்றை பதிவிறக்கம் செய்து தருவார்கள் * அதில் கேட்கப்படும் விவரங்களை கவனமாக பூர்த்தி செய்யவும் * பின்னர் சம்பந்தப்பட்ட அலுவலர் உதவியுடன், தனி நபரின் பயோமெட்ரிக் தகவல்களை வழங்கலாம் இதையடுத்து அலுவலர் மூலம் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் * இறுதியாக ரூ.25 + ஜி.எஸ்.டி கட்டணத்தை செலுத்த வேண்டும் * அப்போது ஆதார் மாற்றம் செய்வது தொடர்பான URN அடங்கிய ஆவணம்(acknowledgement slip) அளிக்கப்படும் * இந்த URN கொண்டு, தங்களது ஆதார் அட்டையின் நிலையை பின்னர் அறிந்து கொள்ளலாம் மண்டல UIDAI அலுவலகத்திற்கு தபால் அனுப்பவும்: * அதிகாரப்பூர்வ UIDAI இணையதளத்தில் இருந்து, ஆதார் அட்டையில் மாற்றம் செய்யும் படிவத்தை பதிவிறக்கவும்
* அதில் கேட்கப்படும் விவரங்களை நீங்களே பூர்த்தி செய்ய வேண்டும் * ஆதார் அட்டையில் இடம்பெற வேண்டிய புகைப்படத்தை, அரசு அதிகாரி ஒருவரின் கையொப்பத்துடன் சேர்க்கவும் * பின்னர் கீழ்க்கண்ட முகவரிக்கு படிவத்தை அனுப்பவும் UIDAI Regional Office, Khanija Bhavan, No.49, 3rd Floor, South Wing Race Course Road, Bangalore - 560 001 மேற்கூறிய வழிகளைப் பின்பற்றினால், 15 முதல் 20 நாட்களுக்குள் ஆதார் அட்டையில் இருக்கும் புகைப்படம் மாற்றம் செய்யப்பட்டு விடும்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews