நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு,..எம்.பி.பி.எஸ் படிப்பு மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்,..கட் ஆப் மதிப்பெண் உயர்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 06, 2019

நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு,..எம்.பி.பி.எஸ் படிப்பு மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்,..கட் ஆப் மதிப்பெண் உயர்வு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதை தொடர்ந்து மருத்துவ படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண் வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டைக்காட்டிலும் கட் ஆப் மதிப்பெண் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட 15 மதிப்பெண் அதிகரித்துள்ளது. முன்னேறிய பிரிவினருக்கு கடந்த ஆண்டு 119 ஆக இருந்த கட் ஆப் மதிப்பெண் இந்த ஆண்டு 134 ஆக அதிகரித்துள்ளது. ஓ.பி.சி பிரிவினருக்கு 96 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்த கட் ஆப் மதிப்பெண், இந்த ஆண்டு 107 ஆக அதிகரித்துள்ளது. நீட் தேர்வு எளிதாக இருந்த‌தால் மாணவர்கள் நிம்மதி அடைந்திருந்த நிலையில் கட் ஆப் மதிப்பெண் திடீரென உயர்த்தப்பட்டுள்ளதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நாளை முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்: சென்னை: எம்.பி.பி.எஸ் படிப்பு மற்றும் பி.டி.எஸ் படிப்புகளில் சேர நாளை முதல் மாணவர்கள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்கலாம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதை தொடர்ந்து நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் பதிவு செய்யும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அந்த விண்ணப்பத்தை உரிய சான்றிதழை இணைத்து, மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் மருத்துவப் படிப்புகான நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. மாலை 4 மணி அளவில் வெளியிடப்படும் என அறிவித்த நிலையில் 2 மணி நேரத்திற்கு முன்பே வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் மருத்துவமுறை படிப்புகளுக்கு நீட் தேர்வு மதிபெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் கடும் சோதனை மற்றும் கட்டுப்பாடுகளுடன் கடந்த மாதம் 5-ம் தேதி நடைபெற்றது. பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்தில் மட்டும் நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு பின்னர் 20 ம் தேதி நடைபெற்றுது. நடப்பு ஆணடுக்கான மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கான நீட் தகுதி தேர்வை இந்தியா முழுவதும் 14 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினர். இதில் தமிழ் நாட்டில் மட்டும் 14 நகரங்களில் 188 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வை 1.40 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர். இந்த தேர்வு முடிவுகள் இணையதளததில் வெளியிடப்பட்டுள்ளது. ஆயுர்வேதா, சித்தா, ஆயுஷ் உள்ளிட்ட படிப்புகளுக்கும் நீர் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறது. தேர்வு முடிவுகள் www.nta.ac.in , www.ntaneet.nic.in ஆகிய இணையதளங்களில் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
இதில் தமிழகத்தில் 48.57% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிகபட்சமாக டெல்லியில் 74.92 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் கடந்த ஆண்டை விட 9.01% மாணவ, மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். நீட் தேர்வில் அகில இந்திய அளவில் 57-வது இடம் பிடித்த ஸ்ருதி தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார். 720 மதிப்பெண்ணுக்கு 685 மதிப்பெண் எடுத்து ஸ்ருதி சாதனை படைத்துள்ளார். ராஜஸ்தானை சேர்ந்த நலின் கந்தேல்வால் என்ற மாணவன் 701 மதிப்பெண் எடுத்து இந்திய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளார். மாற்றுத்திறனாக்கள் பிரிவில் தமிழகத்தின் கார்வண்ணப்பிரபு 575 மதிப்பெண் எடுத்து 5 -வது இடத்தை பிடித்தார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews