👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கடந்தாண்டு மாறுதல் பெற்ற அரசு பள்ளி ஆசிரியர்களை வரும் 6ம் தேதிக்குள் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. அவற்றில் 30க்கும் குறைவான மாணவர்கள் உடைய பள்ளிகளில் ஒரு ஆசிரியர் ஒரு தலைமையாசிரியர் இருப்பர்.இப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பொது இடமாறுதல் கலந்தாய்வில் வேறு இடங்களுக்கு மாறுதல் பெற்றாலும் அந்த இடத்துக்கு வேறு ஆசிரியர்கள் வந்த பின்பே விடுவிக்கப்படுவர்.அதுபோல் கடந்தாண்டு ஜூனில் நடந்த கலந்தாய்வில் வேறு பள்ளிக்கு மாறுதல் பெற்றும் இதுவரை விடுவிக்கப்படாமல் உள்ள ஆசிரியர்களை ஜூன் 6க்குள் விடுவிக்க தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. பின் 'எமிஸ்' இணையதளத்தில் காலி பணியிடமாக பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவற்றை கலந்தாய்வில் பணி நிரவல் அல்லது பணி மாறுதல் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U