3 ஆண்டுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய முடிவு: அதிகாரிகள் அதிர்ச்சி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 06, 2019

3 ஆண்டுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய முடிவு: அதிகாரிகள் அதிர்ச்சி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் அறநிலையத்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய கமிஷனர் முடிவு செய்து இருப்பது அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்து அறநிலையத்துறையில் உதவியாளர், ஆய்வாளர், செயல் அலுவலர், உதவி ஆணையர், துணை ஆணையர், இணை ஆணையர், கூடுதல் ஆணையர் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்கள் விருப்பத்தின் பேரிலோ, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில், ஏப்ரல் முதல் மே 31ம் தேதி வரை நடக்க இருந்த பொது மாறுதல், கடந்த மார்ச் 10ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்ததால் ஏப்ரல், மே மாதங்களில் பணி மாறுதல்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. கடந்த மே 27ம் தேதியுடன் தேர்தல் நடத்தை விதிமுறை தளர்த்தப்பட்டது. இதை தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேல், ஒரே இடத்தில் பணிபுரிந்த அறநிலையத்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும். ஆனால், தற்போது வரை அவர்கள் பணியிட மாற்றம் செய்யவில்லை. இதற்கிடையே செயல் அலுவலர்கள் பலர் விருப்பத்தின் பேரிலும் ஆணையர் அலுவலகத்தில் பணி மாறுதல் கேட்டு விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால், ஆணையர் அலுவலகம் தற்போது வரை அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் நிறுத்தி வைத்துள்ளது.
இதற்கு மேலிடத்தில் இருந்து பணிமாறுதல் கேட்டு எந்த உத்தரவும் வராததால் ஆணையர் அலுவலகம் இந்த விவகாரத்தில் மவுனம் காத்து வருவதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மேலிட உத்தரவுகள் கிடைக்கும் பட்சத்தில் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள் என்று அறநிலையத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுதொடர்பாக, அவர் மேலும் கூறும் போது, ‘3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் 165க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களை பணி மாறுதல் செய்ய ஆணையர் முடிவு செய்து இருந்தார். இதை தொடர்ந்து ஆணையர் அலுவலகம் சார்பில் பணி மாறுதல் செய்யப்பட்ட அதிகாரிகள் பட்டியல் ஒன்றை அமைச்சர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. இதற்கு அமைச்சர் அலுவலகத்தில் இருந்து ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால், தற்போது வரை பணி மாறுதல் செய்யாமல் நிறுத்தி வைத்துள்ளார்’ என்றார். இருப்பினும், பணி மாறுதல் தொடர்பான பட்டியலால் அதிகாரிகள் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews