அரசின் கல்விக் கட்டணத்தை பின்பற்றாத தனியார் கல்வி நிறுவனங்கள்: தமிழக அரசு மவுனமாக இருப்பது ஏன்? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, May 12, 2019

அரசின் கல்விக் கட்டணத்தை பின்பற்றாத தனியார் கல்வி நிறுவனங்கள்: தமிழக அரசு மவுனமாக இருப்பது ஏன்?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
தனியார் கல்வி நிறுவனங்கள் கோடை விடுமுறையிலேயே மாணவர் சேர்க்கையை தொடங்கி விட்டன. இக்கல்வி நிறுவனங்கள் பெறும் தொகைக்கும், அளிக்கும் ரசிதுக்கும் தொடர்பே இல்லாமல் உள்ளது என்று பெற்றொர் தெரிவிக்கின்றனர்.
பிரிகேஜி தொடங்கி கல்லூரி வரை நீக்கமற நிறைந்துள்ளது தனியார் நிறுவனங்களின் கட்டண கொள்ளை. இதை எதிர்த்து போராடினால் சம்பந்தப்பட்டவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் மவுனமாக அதை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். நீதிபதி சிங்காரவேலு கமிட்டி தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் ஒவ்வொன்றும் இவ்வ ளவுதான் கட்டணம் வசூலிக்க வேண்டும் என நிர்ணயம் செய்து அதை இணையதளத்தில் வெளியிட் டுள்ளது. இருந்தாலும் அதை கல்வி நிறுவனங்கள் பொருட்படுத் துவதில்லை.
இன்று தமிழகத்தில் கோலோச்சும் எந்த அரசியல் கட்சிகளும் இதை எதிர்த்து போராட தயாராக இல்லை. ஏனெனில் அனைத்து கட்சி தலைவர்களும் தங்களுக்கென ஒரு கல்வி நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். மாவட்டத்தையே தன் ஆளுகைக்குள் வைத்துள்ள அரசு அலுவலர் கூட தனியார் கல்வி நிறுவனத்தில் தன் மகனுக்கோ, மகளுக்கோ இடம் கேட்டு சென்றால் சராசரி பெற்றோர் போலவே நடத்தப்படுகிறார்கள். இதை அவர் எதிர்த்தால் அக்கல்விநிறுவனத்தில் பயிலும் அவரின் குழந்தைக்கு மனோரீதியான இம்சைகளை கொடுக்க ஒரு போதும் இக்கல்வி நிறுவனங்கள் தயங்கியதே இல்லை. சின்ன சின்ன பிரச்சினைக்குக் கூட போராட்டங்களும், சாலை மறியல்களும் செய்யும் பொதுமக்கள் இந்த கட்டணக் கொள்ளையை வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொள்ள தயாராகிவிட்டனர். இதுதொடர்பாக விழுப்புரத்தில் தனியார் பள்ளிகளில் குழந்தை களை படிக்க வைக்கும் பெற்றோர் தரப்பில் கூறியதாவது:சுப்பிரமணியன் என்பவர் கூறும்போது, “அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் எத்தனை பேருக்கு ஆங்கிலம் சரளமாக பேச முடியும்? ஒழுக்கத் தையும் , கல்வியையும் ஒருசேர கற்றுத் தருவதால் தனியார் பள்ளி களை நாடுகிறோம். அவர்கள் அடிக்கும் கட்டண கொள்ளை அரசுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் ஏன் மவுனமாக இருக்கிறது என்பதுதான் தெரியவில்லை” என்றார்.
ஜோதி என்பவர் கூறுகையில், “தனியார் பள்ளிகளில் வாங்கும் தொகைக்கும், ரசீது அளிக்கும் தொகைக்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தாலும் அதை யாரும் பொருட்படுத்துவதில்லை. பேருந்தில் நடத்துநர் 1 ரூபாய் சில்லரை தராவிட்டால் சண்டைபோடும் நாம் இங்கு மவுனமாகிறோம். ஏனெனில் நம் பிடி இப்பள்ளிகளின் கையில் உள்ளது” என்று குறிப்பிட்டார். தன்சிங், பிரபாகரன், முத்துவேல் ஆகியோரும், தனியார் பள்ளிகளின் அத்துமீறல்களை, கட்டண கொள்ளையையும் சொல்லி புலம்பினார்கள்.
இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அறிவழகன் கூறுகையில், “ஒன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைக்கு எவ்வளவு நோட்டு புத்தகம் கொடுத் திருக்கிறார்கள்? இக்கட்டண கொள்ளையை தடுக்கக்கோரி மாவட்ட கல்வி அலுவலகங்கள் முன்பு பல ஆண்டுகளாக போராட் டம் நடத்தி வருகிறோம். ஆனால் பெற்றோரின் ஆதரவு ஒரு சதவீதம் கூட இல்லை. ஊர்கூடி தேர் இழுப்பதுபோல ஒன்று சேர்ந்து மக்கள் போராடினால் தான் இதற்கு தீர்வு ஏற்படும். முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி அதிரடியாக அனைத்து வங்கிகளையும் தேசிய மயமாக்கியது போல தமிழகஅரசு இந்த தனியார் பள்ளிகளை அரசுடமையாக் கினால் தான் இதற்கு முடிவு ஏற்படும்” என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews