மீன்வள பல்கலைக்கழகத்தில் புதிய பாடப் பிரிவுகள் துவக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, May 18, 2019

மீன்வள பல்கலைக்கழகத்தில் புதிய பாடப் பிரிவுகள் துவக்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
''மீன்வளப் பல்கலையில் இந்த ஆண்டு மூன்று புதிய பட்டப்படிப்பு பிரிவுகள் துவக்கப்பட்டுள்ளன'' என பல்கலை துணைவேந்தர் பெலிக்ஸ் தெரிவித்தார்.நாகையில் அவர் கூறியதாவது:மீன்வளப் பல்கலைக்கழகம் நாகையில் 2012ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதன் கட்டுப்பாட்டில் உள்ள 10 கல்லுாரிகளில் எட்டு பாடப் பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
இந்தாண்டு இளநிலை ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் பட்டப்படிப்பு இளநிலை மீன்வள மாலுமி கலை தொழில்நுட்பவியல் இளநிலை வணிக நிர்வாகவியல் ஆகிய நான்காண்டு பி.டெக். பாடப் பிரிவுகள் துவக்கப்பட்டு தலா 20 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.இப்பட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு ஏப். 28 முதல் விண்ணப்பங்கள் www.tnjfu.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். மே 31 கடைசி நாள்.இவ்வாறு அவர் கூறினார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews