பிளஸ் 2 முடித்த மாணவர்கள் - சட்டப் படிப்புகளில் நேரடியாக சேருவதற்கு 16ல் பதிவு துவக்கம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, May 12, 2019

பிளஸ் 2 முடித்த மாணவர்கள் - சட்டப் படிப்புகளில் நேரடியாக சேருவதற்கு 16ல் பதிவு துவக்கம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
பிளஸ் 2 முடித்த மாணவர்கள், சட்டப் படிப்புகளில் நேரடியாக சேருவதற்கு, சட்டப் பல்கலை மற்றும் சட்டக் கல்லுாரிகளில் விண்ணப்பிக்க வேண்டும்.இதற்கான அறிவிப்பை, தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலை அறிவித்துள்ளது. சென்னையில் உள்ள சீர்மிகு சட்டக் கல்லுாரியில் நடத்தப்படும் படிப்புகளுக்கு, வரும், 16ம் தேதி விண்ணப்ப பதிவு துவங்குகிறது. எல்.எல்.பி., என்ற, இளநிலை சட்டப் படிப்புடன், பி.ஏ., - பி.பி.ஏ., - பி.காம்., மற்றும் பி.சி.ஏ., போன்றவற்றில், ஏதாவது ஒன்றை சேர்த்து, ஒருங்கிணைந்த ஐந்தாண்டு படிப்பு நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்ப பதிவு, வரும், 16ல் துவங்குகிறது .
எல்.எல்.பி., ஹானர்ஸ் படிப்புக்கு, ஜூன், 28 முதல், ஜூலை, 26 வரையும், முதுநிலை சட்டப் படிப்புக்கு, ஜூலை, 24 முதல், ஆக., 14 வரையும் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப பதிவு கட்டணம், 1,000 ரூபாய்; பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கு, 500 ரூபாய். ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்; விண்ணப்பங்களை வாங்கியும், பூர்த்தி செய்து அனுப்பலாம் சட்டப் பல்கலை இணைப்பில் உள்ள, அரசு சட்டக் கல்லுாரிகளில், இளநிலை படிப்பில் சேர, ஐந்து ஆண்டு, எல்.எல்.பி., ஒருங்கிணைந்த படிப்புக்கு, 16ம் தேதி முதல், விண்ணப்பம் வழங்கப்படும்; 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும் மூன்றாண்டு, எல்.எல்.பி., படிப்புக்கு, ஜூன், 28 முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும்; ஜூலை, 26க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப கட்டணம், 500 ரூபாய். பட்டியல் மற்றும் பழங்குடியினத்தவருக்கு, 250 ரூபாய். கூடுதல் விபரங்களை, தமிழக சட்டப் பல்கலையின், http://tndalu.ac.in என்ற, இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம். 5 ஆண்டு சட்டப்படிப்புகளுக்கு மே 16 முதல் விண்ணப்ப விநியோகம்:
இளநிலை சட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள சீர்மிகு சட்டப் பள்ளி மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள 12 சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படும் பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கான ஐந்தாண்டுகள் ஒருங்கிணைந்த இளநிலை படிப்புகள் மற்றும் பட்டப் படிப்பை முடித்தவர்களுக்கான மூன்றாண்டு சட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
இப்போது 2019-20-ஆம் கல்வியாண்டுக்கான சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஐந்தாண்டு படிப்புகளைப் பொருத்தவரை பி.ஏ.-எல்.எல்.பி., பி.காம்.-எல்.எல்.பி., பி.பி.ஏ.-எல்.எல்.பி., பிசிஏ-எல்.எல்.பி. ஆகிய நான்கு படிப்புகள் வழங்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்கள் மே 16-ஆம் தேதி முதல் நேரிலும், தபால் மூலமும் விநியோகிக்கப்படும். விண்ணப்பக் கட்டணம் ரூ. 1,000. தபால் மூலம் பெற கூடுதலாக ரூ. 100 கட்டணம் செலுத்த வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க மே 31 கடைசி நாளாகும். அதுபோல மூன்றாண்டு எல்.எல்.பி. படிப்புக்கான விண்ணப்பம் ஜூன் 28 முதல் விநியோகிக்கப்பட உள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க ஜூலை 26 கடைசி நாளாகும். கட்டணம் எவ்வளவு: சீர்மிகு சிறப்புப் பள்ளியில் வழங்கப்படும் ஹானர்ஸ் படிப்புகளுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 1000 ஆகும். எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு ரூ. 500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 12 இணைப்புக் கல்லூரி படிப்புகளில் சேர்க்கை பெறுதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 500 ஆகும். எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு ரூ. 250 ஆகும்.
தபால் மூலம் விண்ணப்பம் பெற விரும்புபவர்கள் கூடுதலாக ரூ. 100 கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக இணையதளத்தை (www.tndalu.ac.in) பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews