இனி பென்டிரைவை 'safely eject' செய்யத் தேவையில்லை - மாற்றம் கொண்டுவந்த மைக்ரோசாஃப்ட் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, April 09, 2019

இனி பென்டிரைவை 'safely eject' செய்யத் தேவையில்லை - மாற்றம் கொண்டுவந்த மைக்ரோசாஃப்ட்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப் கணினிகளில் இருக்கும் டேட்டாக்களைப் பரிமாற்றம் செய்வதற்காக பென் டிரைவ், ஹார்டு டிஸ்க் போன்ற எக்ஸ்டர்னல் டிரைவ்கள் நீண்ட காலமாகப் பயன்பாட்டில் இருக்கின்றன. கணினியில் இவற்றைப் பயன்படுத்தி முடித்த பின்னர், அதை வெளியே எடுப்பதற்கு முன், ஒவ்வொரு முறையும் 'safely eject' என்ற ஆப்ஷனைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். அதைச் செய்யாமல் கணினியிலிருந்து எக்ஸ்டர்னல் டிரைவ்களை வெளியே எடுக்கும்போது, அதன் இயக்கம் திடீரென நின்று போவதால், அவற்றில் டேட்டா அழியவோ, வேறு சில பிரச்னைகள் ஏற்படுவதற்கோ வாய்ப்புகள் உண்டு.
அதைத் தடுக்கும் விதமாகவே, இந்த ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருந்தது. 'safely eject' ஆப்ஷனைத் தேர்வுசெய்யாமல் எடுக்கும்போது, திரையில் எச்சரிக்கை செய்தி ஒன்று காட்டப்படும். அது வேண்டாம் என்றால், செட்டிங்க்ஸ் பகுதியில் உள்ள 'Quick Removel' என்ற ஆப்ஷனையும் பயன்படுத்தலாம். இதுவும் விண்டோஸ் 7 மற்றும் அதற்கு முந்தைய இயங்குதளங்களில் கொடுக்கப்பட்டிருந்த ஒரு வசதிதான். இந்த ஆப்ஷன் மூலமாக, ஒவ்வொரு தடவையும் 'safely eject' என்பதைச் செய்ய தேவையிருக்காது. மேலும், அதே பகுதியில் 'Better Perfomance' என்ற தேர்வும் இருந்தது. அதைப் பயன்படுத்தும்போது, ஃபிளாஷ் டிரைவின் செயல்திறனை மேம்படுத்தும். தற்போது, இந்த நடைமுறையில் உள்ள பாலிசியில் மாற்றம் செய்திருக்கிறது, மைக்ரோசாஃப்ட் நிறுவனம். சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்டோஸ் 10 அப்டேட்டில் அதற்கான ஆப்ஷன் சேர்க்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக 'Better Perfomance' என்பதைத் தேர்வுசெய்யும்போதும் 'safely eject' என்பதைத் தேர்வுசெய்யாமல், ஃபிளாஷ் டிரைவ்களை ரிமூவ் செய்துகொள்ள முடியும். Windows 10 அப்டேட் 1809 -க்குப் பிறகு இருக்கும் வெர்ஷன்களில் இதைப் பெற்றுக்கொள்ள முடியும் என மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது.
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews