Flash News : 10th Result Published - 95.2% மாணவ,மாணவியர்கள் தேர்ச்சி! Full Details - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, April 29, 2019

Flash News : 10th Result Published - 95.2% மாணவ,மாணவியர்கள் தேர்ச்சி! Full Details

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
தமிழகம், புதுச்சேரியில் 12 ஆயிரம் பள்ளிகளை சேர்ந்த 9 லட்சத்து 97 ஆயிரம் பேர் எழுதிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் வெளியானது. இதில் மொத்தம் 95.2 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இதில் மாணவர்கள் 93.3 சதவீதமும், மாணவிகள் 97 சதவீதம் பேரும் தேர்ச்சியடைந்துள்ளனர். புதுச்சேரியில் 97.57 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் முதலிடம் 98.53 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்தது. 98.48 சதவீதத்துடன் ராமநாதபுரம் மாவட்டம் இரண்டாவது இடத்திலும், 98.45 சதவீதத்துடன் நாமக்கல் 3-வது இடத்தையும் பிடித்தது. 89.98 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் வேலூர் மாவட்டம் கடைசி இடத்தை பிடித்தது. பாடவாரியாக தேர்ச்சி விகிதம்
மொழிப்பாடம்: 96.12%
ஆங்கிலம்: 97.35%
கணிதம்: 96.46%
அறிவியல்: 98.56%
சமூக அறிவியல்: 97.07%
பள்ளிகள் வாரியான தேர்ச்சி விகிதம்
அரசுப்பள்ளிகள்: 92.48%
அரசு உதவிபெறும் பள்ளிகள்: 94.53%
மெட்ரிக் பள்ளிகள்: 99.05%
இருபாலர் பள்ளிகளில் பயின்றோர்: 95.42%
பெண்கள் பள்ளிகள்: 96.89%
ஆண்கள் பள்ளிகள்: 88.94%
* பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 6,100 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் மாதம் 14ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை நடந்தது. இதன் முடிவுகள் www.tnresults.nic.in இணைய தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் மாதம் 14ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை நடந்தது. இந்த தேர்வில் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 12 ஆயிரத்து 546 பள்ளிகளில் படித்த 9 லட்சத்து 97 லட்சம் மாணவ -மாணவியர் தேர்வு எழுதினர். மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் காலையில் தொடங்குவதற்கு பதிலாக கடந்த கல்வியாண்டில் மதியத்தில் மொழிப்பாடத் தேர்வுகள் நடந்தன. விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் மாத இறுதியில் தொடங்கி ஏப்ரல் 15ம் தேதி வரை நடந்தது.
இதையடுத்து, இம்மாதம் 29ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தேர்வுத்துறை ஏற்கெனவே அறிவித்து இருந்தது. இதையடுத்து இன்று காலை 9.30 மணி அளவில் தேர்வு முடிவுகள் வெளியாகின. தேர்வு முடிவுகள் வெளியான அடுத்த 2 நிமிடத்தில் மாணவர்களின் செல்போனுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பிவைக்கப்பட்டது. மே 2ம் தேதி பிற்பகலில் மாணவர்கள் தங்கள் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலமாகவும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களில் மூலமாகவும் தற்காலிக மதிப்பெண் சான்றுகளை பெற்றுக் கொள்ளலாம். 6ம் தேதி முதல் www.dge.tn.nic.in என்ற இணைய தளத்தில் இருந்தும் மாணவர்கள் தாங்களாகவே மதிப்பெண் சான்றுகளை பதிவிறக்கம் செய்து கொள்ள தேர்வுத்துறை ஏற்பாடுகளை செய்துள்ளது.
மே 2 முதல் 4 வரை மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி மாணவர்கள் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் மே 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை பள்ளிகள் மூலமாகவும், தனித் தேர்வர்கள் தேர்வு மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி தோல்வி அடைந்தவர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வு ஜூன் 14ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடக்கிறது. இதற்கு விண்ணப்பிக்கும் முறை குறித்து தனியே அறிவிப்பு வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாயின - 95.2% மாணவ,மாணவியர்கள் தேர்ச்சி!
93.3% மாணவர்களும் 97% மாணவியர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews