👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
வரும் மே 13 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை ஸ்விட்சர்லாந்தில் பேரிடர் மேலாண்மை தொடர்பான ஐநா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் 140 நாடுகளை சேர்ந்த 3000 பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர். இதில் இந்தியா சார்பாக மணிப்பூரை சேர்ந்த 2ம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமியான லிஸிப்ரியா கஞ்சுஜம் பங்குபெற்று உரையாற்ற உள்ளார்.
இந்த மிக குறைந்த வயதில் இந்தியாவின் சார்பில் சார்பில் இந்த சிறுமி ஐநா சபையில் பேச உள்ளது நமது நாட்டிற்கே பெருமையான விஷயம் என பொதுமக்கள் சமூகவலைத்தளங்களில் கருத்து கூறி வருகின்றனர். பேரிடர் மேலாண்மை குறித்த ஐநா பொதுக்கூட்டத்தில் பங்குபெறுபவர்களிலேயே மிகக்குறைந்த வயது பிரதிநிதியான இந்த 7 வயது சிறுமி ஏற்கனவே, கடந்த ஆண்டு பேரிடர் மேலாண்மை குறித்த ஆசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U