பெரிஸ்கோப் செயலியில் இருந்து வீடியோக்களை தரவிறக்கம் செய்வது எப்படி? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, April 29, 2019

பெரிஸ்கோப் செயலியில் இருந்து வீடியோக்களை தரவிறக்கம் செய்வது எப்படி?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
பெரிஸ்கோப் நேரலை ஸ்டிரீமிங் செயலி ஆகும். இந்த செயலியை 2015 ஆம் ஆண்டு ட்விட்டர் கைப்பற்றியது. இந்த செயலியை கொண்டு நிகழ்வுகள் மற்றும் தனிப்பட்ட தகவல்களை பிராட்கேஸ்ட் செய்ய முடியும். இந்த செயலியின் பெயர் சமீபத்தில் மாற்றப்பட்டு ட்விட்டர் லைவ் என தற்சமயம் அழைக்கப்படுகிறது. இந்த செயலி சிறப்பாக இயங்குகிறது என்றாலும், இது இன்னும் மேம்படுத்தப்படலாம் என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது.
சில சமயங்களில் ஸ்டிரீம் செய்யும் போது செயலியை நம்ப முடியாமல் போகும். இதுதவிர பெரிஸ்கோப் க்களை டவுன்லோடு செய்ய பில்ட்-இன் ஆப்ஷன் எதுவும் இல்லை. எனினும், இவ்வாறு செய்ய பல்வேறு மூன்றாம் தரப்பு சேவைகள் இருக்கின்றன. பெரிஸ்கோப் க்களை டவுன்லோடு செய்வதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1 - சொந்த பெரிஸ்கோப் ஸ்டிரீம்களை டவுன்லோடு செய்வது எப்படி? சொந்தமாக ஸ்டிரீம் செய்யும் போது பெரிஸ்கோப் ஸ்டிரீம்களை டவுன்லோடு செய்ய அதிகாரப்பூர்வ ஆப்ஷன் ஒன்று வழங்கப்படுகிறது. ஸ்டிரீம் நிறைவுற்றதும், உங்களது க்கள் அக்கவுண்ட் அனாலிடிக்ஸ் டேஷ்போர்டில் சேமிக்கப்பட்டிருக்கும். அங்கு சென்று ப்ரோஃபைல் புகைப்படத்தை க்ளிக் செய்ய வேண்டும். அங்கு சென்றதும் நீங்கள் எடுக்க வேண்டிய வில் காணப்படும் நீல நிற ஐகானை க்ளிக் செய்ய வேண்டும். இந்த கோரிக்கையை பரிசீலனை செய்ய பெரிஸ்கோப் சில நிமிடங்களை எடுத்துக் கொள்ளும். இவ்வாறு செய்ததும், பச்சை நிற பட்டனை க்ளிக் செய்து வை டவுன்லோடு செய்து கொள்ளலாம். இந்த கோரிக்கை மொபைல் சாதனங்களில் இயங்காது.
இதற்கு ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். செயலியில் ஆட்டோசேவ் செட்டிங்கை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு செய்யும் போது உங்களது பிராட்கேஸ்ட்கள் நிறைவுறும் போது தானாக சேமிக்கப்பட்டு விடும். இதனை அக்கவுண்ட் -- செட்டிங்ஸ் -- ஆட்டோசேவ் பிராட்கேஸ்ட் ஆப்ஷன்களில் பார்க்க முடியும். இதேபோன்று சாட் ஹிஸ்ட்ரி, வியூவிங் ஹிஸ்ட்ரி மற்றும் இதர அக்கவுண்ட் விவரங்களை டவுன்லோடு செய்யும் வசதியை பெரிஸ்கோப் வழங்குகிறது. இதற்கு பெரிஸ்கோப் டேட்டா பக்கம் சென்று சைன்-இன் செய்ய வேண்டும். 2 - மற்றவர்களின் பெரிஸ்கோப்க்களை டவுன்லோடு செய்வது எப்படி?
மற்றவர்களின் பெரிஸ்கோப் க்களை டவுன்லோடு செய்ய மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்த வேண்டும். கம்ப்யூட்டர் பயன்படுத்துவோர் எனில், GetVideo வலைதளம் சென்று முகவரியை சர்ச் ஆப்ஷனில் பேஸ்ட் செய்ய வேண்டும். சர்ச் ஆப்ஷனில் 'Enter a Video link' வாசகம் இடம்பெற்றிகருக்கும். இங்கு நீல நிற சர்ச் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் வின் நீளம், பெயர் மற்றும் டவுன்லோடு முகவரி உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும். இந்த பட்டனை க்ளிக் செய்ததும் டவுன்லோடு ஆகும். இதே வழிமுறையை பயன்படுத்தி மற்ற மொபைல் பிரவுசர்களில் இருந்தும் க்களை டவுன்லோடு செய்யலாம். பிரவுசர் செல்லாமலும் க்களை டவுன்லோடு செய்ய முடியும்.
இதற்கு Scopedown எனும் செயலியை பயன்படுத்தலாம். முந்தைய GetVideo சேவையை போன்றே இந்த செயலியிலும் முகவரியை கொண்டு க்களை டவுன்லோடு செய்யலாம். இவ்வாறு செய்யும் போது க்கள் உங்களது மொபைலில் சேமிக்கப்படும். இந்த செயலியின் ஒரே சிரமம், இது க்களை .ts என்ற வடிவில் சேமிக்கும். இது அனைவருக்கும் அறிமுகமான MP4-ஐ விட அதிக மெமரியை எடுத்துக் கொள்ளும். Scopedown செயலி ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் மட்டுமே கிடைக்கிறது. ஐ.ஓ.எஸ். பயனர்கள் வலைதள சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews