👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
செக் குடியரசு நாட்டில் படிக்கச் சென்ற கல்லுாரி மாணவர் மர்மமான முறையில் இறந்த சம்பவத்தில் மாணவரின் உடலை மீட்டுத்தர அவரது குடும்பத்தினர் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.நாகை மாவட்டம் சிக்கல் அடுத்த பனைமேட்டைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். கூலித் தொழிலாளி. இவரது மகன் ஜீவானந்தம், 28. பிடெக் பட்டதாரி. சென்னையில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றும் போது, கன்னியாக்குமரி மாவட்டம் இளையாம்புத்துாரைச் சேர்ந்த பிபிஜா செல்வம் என்பவரை காதலித்து திருமணம் செய்து ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் 2018ம் ஆண்டு செப்., மாதம் செக் குடியரசு நாட்டிற்கு, மாணவர் விசாவில் சென்றுள்ளார். அங்குள்ள 'டெக்னிக்கல் யுனிவர்சிடி ஆப் அஸ்ரோவா' என்ற கல்வி நிறுவனத்தில், மார்க்கெட்டிங் பிசினஸ் மேனஜ்மென்ட் படித்து வந்துள்ளார். கடந்த 20 ம் தேதி, யுனிவர்சிடி விடுதியில் 7 வது மாடியில் தங்கியிருந்த ஜீவானந்தம் மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்து விட்டதாக சக மாணவர்கள், ஜீவானந்தம் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஜீவானந்தம் இறப்புக்கான உண்மை காரணத்தை விசாரணை செய்வதோடு, இறந்த ஜீவானந்தம் உடலை மீட்டுத் தருமாறு, அவரது குடும்பத்தினர், கடந்த 22ம் தேதி, கலெக்டர் சுரேஷ்குமாரிடம் மனு அளித்துள்ளனர்.
இதுவரை எவ்வித தகவலும் கிடைக்காததால், அரசு தலையிட்டு ஜீவானந்தத்தின் உடலை விரைந்து மீட்டுத் தரவேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். உயர் படிப்புக்காக அயல் நாடு சென்ற மாணவர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U