அரசுப் பள்ளிக்கு ரெகமண்டேசன் செல்லும் அளவு தரம் உயர்த்தியது நான்தான் – மு.க.ஸ்டாலின் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, April 07, 2019

அரசுப் பள்ளிக்கு ரெகமண்டேசன் செல்லும் அளவு தரம் உயர்த்தியது நான்தான் – மு.க.ஸ்டாலின்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
அரசுப் பள்ளியில் சேரவே பரிந்துரைக்கடிதம் பெறும் அளவுக்கு மாநகராட்சிப் பள்ளியின் தரத்தை உயர்த்தியதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வடசென்னை தொகுதிக்குட்பட்ட கொளத்தூர் ஜி.கே.எம்.காலனி, திரு.வி.க. நகரில் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது வெளியூர்களில் 20 நாட்கள் பிரச்சாரம் முடித்து சென்னை திரும்பியபோதும், கலைஞர் தன் உழைப்பைப் பாராட்டிய வார்த்தைகள் நினைவுக்கு வந்தததால் ஓய்வெடுக்க மனமில்லை என்றார்.


பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக உதயசூரியனுக்கு ஓட்டு போட முடிவு செய்துவிட்டீர்களா? என தொண்டர்களைப் பார்த்து ஸ்டாலின் கேட்டபோது அவர்கள் ஒருமித்த குரலில் ஆமாம் என்றனர்.

தேர்தலுக்காக, ஓட்டுக்காக வந்து மக்களை சந்திப்பவன் கிடையாது, என்றும், தன்னைப் போன்று அதிக நாட்கள் தொகுதிக்கு சென்று மக்களுக்காக அதிக நேரம் செலவழித்த எம்எல்ஏ வேறு யாரும் கிடையாது என ஸ்டாலின் தெரிவித்தார்.



இடைத்தேர்தல் முடிவுகள் வந்த பின் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் எனக் கூறிய மு.க.ஸ்டாலின், கலைஞர் உயிருடன் இருந்திருந்தால் அவரே இங்கு வந்து வாக்கு கேட்டிருப்பார் என நினைவு கூர்ந்தார்.

முன்பெல்லாம் ஒரு மாணவன் ஒழுக்கம் கெட வேண்டுமானால் சென்னை மாநகராட்சி பள்ளியில் பள்ளியில் சேர்க்க வேண்டுமென கொச்சையாக உதாரணம் பேசியதாகவும், தான் மேயராக வந்த பின் தனியார் பள்ளிகளுக்கு இணையாக கணினி உள்ளிட்ட வசதிகளைக் கொண்டு வந்து தரம் உயர்த்தியதாகவும் தெரிவித்தார்.
பெங்களூரு, மும்பை உள்ளிட்ட நகரங்களில் போல் அல்லாமல் சென்னையில் ஓரளவு போக்குவரத்து நெரிசல் குறைய திமுக ஆட்சிக்காலத்தில் கட்டிய பாலம் தான் காரணம் என ஸ்டாலின் குறிப்பிட்டார்.

கொளத்தூரில் தமது தொகுதி நிதியில் கட்டப்படும் ஏ.சி. வசதியுள்ள சமூக நலக் கூடத்துக்கு காமராஜர் பெயரையே வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்டாலின் அறிவித்தார். கேபிள் கட்டணம், சமையல் எரிவாயு கட்டணம் குறைக்கப்படும் என அறிவித்துள்ளோம்.
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews