அண்ணா, சென்னைப் பல்கலைக் கழகங்களுக்குப் பின்னடைவு: தேசிய அளவிலான உயர் கல்வி நிறுவன தரவரிசை வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, April 09, 2019

அண்ணா, சென்னைப் பல்கலைக் கழகங்களுக்குப் பின்னடைவு: தேசிய அளவிலான உயர் கல்வி நிறுவன தரவரிசை வெளியீடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
தேசிய அளவிலான உயர் கல்வி நிறுவன தரவரிசைப் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த அண்ணா, சென்னைப் பல்கலைக் கழகங்கள் கடந்த ஆண்டைக் காட்டிலும் பின்னடைவைச் சந்தித்துள்ளன. அதே நேரம், தேசிய அளவிலான கல்லூரிகள் தரவரிசைப் பட்டியலில் சென்னை மாநிலக் கல்லூரி மூன்றாம் இடம் பிடித்து அசத்தியிருக்கிறது. கடந்த முறை இந்தக் கல்லூரி 5-ஆவது இடத்தில் இருந்தது. ஒட்டுமொத்த உயர் கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களை உலகத் தரத்துக்கு உயர்த்தும் நோக்கில், கல்வி நிறுவனங்களிடையே போட்டியை உருவாக்கும் வகையில் தேசிய அளவிலான தரவரிசைப் பட்டியல் வெளியிடும் நடைமுறையை, மத்திய அரசு 2016-ஆம் ஆண்டு முதல் பின்பற்றி வருகிறது.
அதுபோல, 2019-ஆம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புதுதில்லியில் திங்கள்கிழமை வெளியிட்டார். இதில் ஒட்டுமொத்த உயர் கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் இரண்டாம் இடத்தையும், தில்லி ஐஐடி மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன. கடந்த முறை 10-ஆம் இடத்தில் இருந்த சென்னை அண்ணா பல்கலைக் கழகம் இம்முறை 14-ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. கோவை பாரதியார் பல்கலைக் கழகம் 21- ஆம் இடத்தையும், திருச்சி என்ஐடி 24- ஆம் இடத்தையும், வேலூர் விஐடி 32- ஆம் இடத்தையும் பிடித்துள்ளன. கடந்த முறை 29-ஆம் இடத்தில் இருந்த சென்னைப் பல்கலைக் கழகம் இம்முறை 33- ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
மேலும் அழகப்பா பல்கலைக்கழகம் (47), தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் (68), மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் (69), பாரதிதாசன் பல்கலைக் கழகம் (86), பெரியார் பல்கலைக் கழகம் (97), தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம் (99) என முதல் 100 பட்டியலில் 21 தமிழக பல்கலைக் கழகங்கள் இடம்பிடித்துள்ளன. பல்கலைக் கழகங்கள் அளவில்...: தேசிய அளவிலான பல்கலைக் கழகங்கள் பட்டியலிலும் அண்ணா பல்கலைக் கழகம் பின்னடைவைச் சந்தித்துள்ளது. கடந்த முறை 4- ஆம் இடத்தில் இருந்த அண்ணா பல்கலைக் கழகம், இம்முறை 7- ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதுபோல கடந்த முறை 18 -ஆவது இடத்தில் இருந்த சென்னைப் பல்கலைக் கழகம் இம்முறை 20- ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
மாநிலக் கல்லூரி 3- ஆம் இடம்: தேசிய அளவில் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியிலில் சென்னை மாநிலக் கல்லூரி 3- ஆம் இடம் பிடித்து அசத்தியுள்ளது. இந்தக் கல்லூரி கடந்த ஆண்டு 5-ஆம் இடத்தில் இருந்தது. அதேபோல லயோலா கல்லூரி (6), எம்.சி.சி. (13) என மொத்தம் 35 தமிழகக் கல்லூரிகள் முதல் 100 தரவரிசையில் இடம்பிடித்துள்ளன. இதில் கோவை அரசுக் கல்லூரி 33- ஆம் இடத்தையும், சென்னை ராணி மேரி கல்லூரி 40- ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. பொறியியல் கல்லூரிகள்: பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் கடந்த முறை 8- ஆவது இடத்தில் இருந்த அண்ணா பல்கலைக் கழகம் இம்முறை 9- ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews