👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 1500 மீ., ஓட்டத்தில் இந்திய வீராங்கனை சித்ரா தங்கம் வென்றார். பெண்களுக்கான 200 மீ., ஓட்டத்தில் டுட்டி சந்த் வெண்கலம் கைப்பற்றினார்.
கத்தார் தலைநகர் தோகாவில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் நடந்தது. இதன் பெண்கள் 1500 மீ., ஓட்டத்தின் பைனலில் இந்தியா சார்பில் பங்கேற்ற சித்ரா அசத்தினார். பந்தய துாரத்தை நான்கு நிமிடம் 14.56 வினாடியில் கடந்த இவர் முதலிடம் பிடித்தார்.
இதன் மூலம், இத்தொடரில் 2017க்குப்பின் மீண்டும் தங்கம் வென்றார். வெள்ளி, வெண்கலம் முறையே பக்ரைனின் டிஜஸ்ட், வின்பேர்டு கைப்பற்றினர்.
டுட்டி சந்த் வெண்கலம்:
பெண்களுக்கான 200 மீ., ஓட்டத்தின் பைனலில் இந்தியாவின் டுட்டி சந்த் கலக்கினார். இலக்கை 23.24 வினாடியில் எட்டிய இவர் மூன்றாவது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். தங்கம், வெள்ளி முறையே பக்ரைனின் சல்வா நசிர், கஜகஸ்தானின் சப்ரோனோவா கைப்பற்றினர்.
ஆண்களுக்கான 1500 மீ., ஓட்டத்தின் பைனலில் இந்தியா சார்பில் அஜய் குமார் சரோஜ் ஜொலித்தார். இலக்கை 3 நிமிடம் 43.18 வினாடியில் கடந்து இரண்டாவது இடத்துடன் வெள்ளிப்பதக்கத்தை வசமாக்கினார். பக்ரைனின் ஆப்ரகாம் தங்கம் வென்றார். கத்தாரின் முசாப்பிற்கு வெண்கலம் கிடைத்தது.
இந்திய அணி அபாரம்:
4*400 மீ., கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்தியாவின் முகமது அனாஸ், பூவம்மா, விஸ்மயா, ஆரோக்கிய ராஜிவ் கூட்டணி இலக்கை மூன்று நிமிடம் 16.47 வினாடியில் எட்டி இரண்டாவது இடம் பிடித்தது.
இதனையடுத்து, வெள்ளிப்பதக்கத்தை தட்டிச்சென்றது. முசா, அப்பாஸ் அடங்கிய பக்ரைன் அணி தங்கம் வென்றது. ஜப்பான் அணிக்கு வெண்கலம் கிடைத்தது
பெண்களுக்கான 10 ஆயிரம் மீ., ஓட்டத்தில் இந்தியாவின் சஞ்சீவனி ஜாதவ் பங்கேற்றார். அபாரமாக செயல்பட்ட இவர் பந்தய துாரத்தை 32 நிமிடம் 44.96 வினாடியில் கடந்து மூன்றாவது இடத்துடன் வெண்கலம் வென்றார். தங்கம், வெள்ளி முறையே பக்ரைனின் ஷிடாயே, ஜப்பானின் ஹிடோமி வென்றனர்.
பெண்களுக்கான 4*100 மீ., தொடர் ஓட்டத்தின் பைனலில் இந்திய அணி 43.81 வினாடி நேரத்தில் வந்து நான்காவது இடம் பிடித்தது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U