தெரிந்து கொள்ளுங்கள் - தேர்தல் விதிகள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 17, 2019

தெரிந்து கொள்ளுங்கள் - தேர்தல் விதிகள்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
ஓட்டுச்சாவடிக்குள்...ஓட்டுப் போடாமல் வரலாமா?விதி எண்: 49 - எம்ஓட்டு போடும் அனைத்து வாக்காளரும், 'ஓட்டளிக்கும் ரகசியத்தை கண்டிப்பாக பின்பற்றுவேன்' என, '17 ஏ' படிவத்தில் கையொப்பமிட வேண்டும். இவ்வாறு கையெழுத்திட்டபின், நடைமுறையை பின்பற்ற மறுத்தால், அவர் ஓட்டு போட, பிரிவு, '49 எம்' கீழ் அனுமதிக்கக்கூடாது.அவ்வாறான இனங்களில், '17 ஏ' பதிவேட்டில், குறிப்பு பகுதியில், ஓட்டு போட அனுமதிக்கப்படவில்லை; ஓட்டுப்பதிவு நடைமுறை மீறப்பட்டது என, குறிப்பிட வேண்டும். அந்தப் பதிவின் கீழ், ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர், முழு கையொப்பமிட வேண்டும்.உதவியாளருடன் செல்லலாம்விதி எண்: 49 - என்-----பார்வையற்றோர், உடல் நலிவடைந்தோர், விதி, '49 - என்' அடிப்படையில், உதவியாளர் ஒருவர் உதவியுடன்,ஓட்டுப் போடலாம்.
உதவியாளர், 18 வயதுக்கு குறையாதவராக இருக்க வேண்டும்.அவரிடம் வாக்காளர் சார்பில், அவர் பதிவு செய்த ஓட்டின் ரகசியத்தை காப்பார் எனவும், அவர் அந்த நாளில், வேறு ஓட்டுச் சாவடிகளில், வேறு யாருக்கும் உதவியாளராக செயல்படவில்லை என்றும், உறுதிமொழி பெற வேண்டும்.ஓட்டளிக்காவிட்டால்...விதி எண் : '49 ஓ'ஒரு வாக்காளர், '17 ஏ' பதிவேட்டில், கையொப்பமிட்ட பின், ஓட்டளிக்க வேண்டாம் என்று முடிவு செய்தால்,ஓட்டுப்பதிவு செய்யும்படி, அவரை கட்டாயப்படுத்தக் கூடாது.மாறாக பதிவேட்டில், அவரது வரிசை எண்ணுக்கு எதிரே குறிப்புரையில்,ஓட்டளிக்க மறுத்தார்; ஓட்டளிக்காமல் சென்றார் என, பதிவு செய்து, ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர், அவரது முழு கையெழுத்திட வேண்டும்.அது என்ன, 'டெண்டர்டு' ஓட்டு?ஓட்டுச்சாவடியில் ஒருவர் ஓட்டை மற்றொருவர் போட்டுவிட்டு சென்றிருந்தால், ஓட்டுப் போட வந்த வாக்காளரின் அடையாளத்தை, சான்றுகளை சரி பார்த்த பின், ஆய்வுக்குரிய ஓட்டுத்தாள் வழியே, அவரை ஓட்டளிக்க அனுமதிக்கவேண்டும். அவரை, ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், ஓட்டுப்போட அனுமதிக்கக் கூடாது.அந்த வாக்காளர், ஆய்வுக்குரிய ஓட்டுச் சீட்டை பெற்று, ரப்பர் முத்திரையை பயன்படுத்தி, ஓட்டு பதிவு செய்ய வேண்டும்.அந்த ஓட்டுச்சீட்டை, ஓட்டுச்சாவடி தலைமை அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அளிக்கப்படும் ஓட்டு, ஆய்வுக்குரிய ஓட்டு அல்லது 'டெண்டர்டு ஓட்டு' என்றுஅழைக்கப்படுகிறது.'சேலஞ்ச்' ஓட்டா?ஓட்டுச்சாவடி முகவர்கள், ஓட்டளிக்க வரும் வாக்காளர்களின் அடையாளம் குறித்து, எதிர்ப்பு தெரிவித்தால், ஒவ்வொரு நிகழ்வுக்கும், இரண்டு ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.அவர் எதிர்ப்பு குறித்து, முழு விசாரணை நடத்த வேண்டும். எதிர்ப்பு நிரூபிக்கப்படவில்லை என்றால், அந்த வாக்காளர்ஓட்டளிக்க அனுமதிக்க வேண்டும்.ஆள் மாறாட்டம் உண்மை என்று நிரூபிக்கப்பட்டால், எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நபரை, ஓட்டளிக்க அனுமதிக்காமல், அவரை காவல் துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும்.'டெஸ்ட் ஓட்டு'ஒரு வாக்காளர், தான் ஓட்டளித்த சின்னம், ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் தெரியாமல், வேறு ஒரு சின்னமும், பெயரும் தெரிவதாக கூறினால், அவரிடம், தேர்தல் நடத்தை விதி, '49 எம் - ஏ' துணை விதியின் கீழ், உரிய படிவத்தில், உறுதிமொழியை பெற்றுக் கொள்ள வேண்டும்.அதன்பின், ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர், ஓட்டுச்சாவடி அலுவலர்களுடன், ஓட்டளிப்பு பகுதிக்கு சென்று, அந்த நபரை மீண்டும் முகவர்கள் முன், ஒரு ஓட்டு பதிவு செய்ய, அனுமதிக்க வேண்டும்.
அந்த நபர் யாருக்கு ஓட்டளித்தார் என்பதை, '17 - ஏ' மற்றும் '17 - சி' பதிவேட்டில், உரிய பதிவுகள் செய்யவேண்டும்.அவர் பதிவு செய்த ஓட்டு, சரியாக இருந்தால், வாக்காளர் வேண்டுமென்றே தவறான புகார் கொடுத்ததால், அவர் தண்டனைக்குரியவராவார். அவரை உடனடியாக, காவல் துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும்.அவர், ஆறு மாதம் சிறை தண்டனை அல்லது 1,000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்து அனுபவிக்க நேரிடும்.ஒருவேளை வாக்காளர் ஓட்டளித்த சின்னம் மற்றும் நபர் விபரங்கள் ஒளிராமல், வேறு சின்னங்களும், வேட்பாளரும், இயந்திரத்தில் ஒளிர்ந்தால்,ஓட்டுப்பதிவை நிறுத்த வேண்டும். உடனடியாக மண்டல அலுவலருக்கு, தகவல் தெரிவிக்க வேண்டும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews