👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் (வேலூர், திரிபுரா நீங்கலாக) 95 தொகுதிகளில் வியாழக்கிழமை (ஏப்.18) வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
ஆந்திரப் பிரதேசம், அருணாசலப் பிரதேசம், அஸ்ஸாம், பிகார், சத்தீஸ்கர், ஜம்மு-காஷ்மீர், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த 11-ஆம் தேதி முதல்கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
மே 19-ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலின், இரண்டாவது கட்ட தேர்தல் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இரண்டாவது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது.
தேர்தல் ஏற்பாடுகள் தயார்; காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கும்: சத்யபிரதா சாகு
தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகள், கர்நாடகத்தில் 14 தொகுதிகள், மகாராஷ்டிரத்தில் 10 தொகுதிகள், உத்தரப் பிரதேசத்தில் 8 தொகுதிகள், அஸ்ஸாம், பிகார், ஒடிஸா ஆகிய மாநிலங்களில் தலா 5 தொகுதிகள், சத்தீஸ்கர், மேற்கு வங்கம் மாநிலங்களில் தலா 3 தொகுதிகள், ஜம்மு-காஷ்மீரில் 2 தொகுதிகள், மணிப்பூர், புதுச்சேரியில் தலா ஒரு தொகுதியில் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. திரிபுராவில் வியாழக்கிழமை நடைபெற இருந்த ஒரு மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் வரும் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒரே கட்டமாக வியாழக்கிழமை மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மாநிலத்தில் ஆளும் அதிமுக இணைந்து தேர்தலைச் சந்திக்கிறது. இந்தக் கூட்டணியில் பாமக, தேமுதிக, தமாகா ஆகிய கட்சிகள் உள்ளன.
காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளுடன் கூட்டணி அமைத்து இந்த முறை திமுக தேர்தலை எதிர்கொள்கிறது. முதல்முறையாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மக்களவைத் தேர்தலில் பங்கெடுக்கிறது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் மறைவுக்கு பிறகு நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும்.
தமிழகத்தில் ரூ.139 கோடி ரொக்கமும், தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருள்களையும் தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஒடிஸாவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டப் பேரவைத் தேர்தலும் நடைபெறவுள்ளது. அங்குள்ள 35 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக், ஹின்ஜிலி, பிஜேபூர் ஆகிய சட்டப் பேரவை தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
ஒடிஸாவில் மக்களவைத் தேர்தலில் மொத்தம் 5 பெண் வேட்பாளர்களும், சட்டப் பேரவைத் தேர்தலில் 25 பெண்களும் போட்டியிடுகின்றனர்.
இந்த மாநிலத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது கட்ட தேர்தல் முறையே 23, 29 ஆகிய தேதிகளில் நடைபெறும். அஸ்ஸாமில் இரண்டாவது கட்டமாக 5 மக்களவைத் தொகுதிகளுக்கு வியாழக்கிழமை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. மொத்தம் 3 பெண் வேட்பாளர்கள் உள்பட 50 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
முதல் தலைமுறை வாக்காளரா? எப்படி வாக்களிப்பது என்ற பயமா??
பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கடந்த சில தினங்களாக வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரசாரம் மேற்கொண்டனர்.
மத்திய அமைச்சர்களான ஜூவல் ஓரம், சதானந்த கௌடா, பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் பிரதமர் ஹெச்.டி.தேவெ கௌடா, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வீரப்ப மொய்லி, ராஜ் பப்பர், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா, பாஜக எம்.பி.யான ஹேமமாலினி, திமுக வேட்பாளர்கள் தயாநிதி மாறன், கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் தேர்தலில் கவனம் ஈர்க்கும் வேட்பாளர்களாக உள்ளனர்.
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகக் கூறி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் மேனகா காந்தி, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சமாஜவாதி மூத்த தலைவர் ஆஸம் கான் ஆகியோர் தற்காலிகமாக பிரசாரத்தில் ஈடுபடுவதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
மே 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
5.98 கோடி வாக்காளர்கள்: தமிழகத்தில் 5.98 கோடி வாக்காளர்கள் உள்ளனர். வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், 38 மக்களவைத் தொகுதிகளுக்கும், 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்குமான இடைத் தேர்தலுக்கும் வியாழக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.
மதுரை மக்களவைத் தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப் பதிவு நீட்டிக்கப்பட்டுள்ளது. வாக்குப் பதிவு தினத்தன்று காலை 6 மணிக்கு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் தன்மையை உறுதி செய்ய மாதிரி வாக்குப் பதிவு நடத்தப்படும். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வேட்பாளர்களின் முகவர்களின் முன்னிலையில் மாதிரி வாக்குப் பதிவு நடத்தப்படும்.
உலகின் மிகக் காஸ்ட்லியான இந்திய மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது.
அனைவரும் தவறாமல் வாக்களித்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றும்படி தினமணி.காம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U