முதுநிலை மருத்துவப் படிப்பு: 2ஆம் கட்ட கலந்தாய்வு தொடக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, April 27, 2019

முதுநிலை மருத்துவப் படிப்பு: 2ஆம் கட்ட கலந்தாய்வு தொடக்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
அரசு ஒதுக்கீட்டில் உள்ள, 345 முதுநிலை மருத்துவ படிப்பு இடங்களுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங், நாளை துவங்க உள்ளது.அரசு மருத்துவ கல்லுாரிகளில், 1,761 எம்.டி., - எம்.எஸ்., - எம்.டி.எஸ்., போன்ற, முதுநிலை மருத்துவ படிப்புகள் உள்ளன. இதில், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு, 849 இடங்கள் சென்றன.
தமிழகத்தில் முதற்கட்ட கலந்தாய்வில் நிரம்பாத 345 அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு இரண்டாம் கட்டத்தில் நிரப்பப்படும். இன்று முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்க உள்ளது. இரண்டாம் கட்ட கலந்தாய்வின் முதல் நாளான இன்று, தரவரிசை மதிப்பெண் 1007.50 முதல் 550 வரை உள்ளவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படுகிறது. தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.டி, எம்.எஸ் பட்ட மேற்படிப்புகளுக்கு 1,761 இடங்கள் உள்ளன. இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 849 இடங்கள் போக, மீதமுள்ள 912 இடங்கள் மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களாகும். தவிர தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்காக 181 இடங்கள் இருக்கின்றன. இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு முதல் கட்டமாக ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் 999 இடங்கள் நிரம்பின. தொடர்ந்து அரசு மற்றும் தனியார் பல் மருத்துவக் கல்லூரி இடங்களுக்கான கலந்தாய்வு ஏப்ரல் 5ஆம் தேதி நடைபெற்றது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கான கலந்தாய்வு 6ஆம் தேதி நடைபெற்றது. கல்லூரிகளில் சேராதவர்களால் ஏற்பட்ட காலியிடங்கள் மற்றும் அகில இந்திய ஒதுக்கீட்டிலிருந்து திரும்ப கிடைக்கும் இடங்களும் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும். மாநில ஒதுக்கீட்டில், 912 இடங்கள் உள்ளன.இத்துடன், தனியார் மருத்துவ கல்லுாரிகளில் இருந்து, மாநில ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்ட, 181 இடங்கள் என, மொத்தம், 1,093 இடங்களுக்கான, முதற்கட்ட மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், ஏப்., 1ல் நடந்தது.கவுன்சிலிங்கில் இடங்கள் பெற்றும் கல்லுாரியில் சேராதோர், இடையில் நின்றோர் என, 179 இடங்கள் காலியாக உள்ளன.அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரம்பாத, 166 இடங்கள் மாநில ஒதுக்கீட்டுக்கு திரும்பின. எனவே, 345 இடங்களுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங், நாளை துவங்கி, 29ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதற்கான அறிவிப்பு, www.tnhealth.org, www.tnmedicalselection.org என்ற இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews