‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டு நிகழ்ச்சி- சென்னையில் நாளை நடக்கிறது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, April 27, 2019

‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டு நிகழ்ச்சி- சென்னையில் நாளை நடக்கிறது

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
‘இந்து தமிழ்’ நாளிதழ், ‘கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி’யுடன் இணைந்து நடத்தும் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ எனும் வழிகாட்டு நிகழ்ச்சி சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வரும் 28-ம் தேதி நடைபெற உள்ளது. ஐஏஎஸ் படிக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் உண்டு. ஆனால், அதற்கான அடிப்படைத் தேவையான கல்வித் தகுதி என்ன, எத்தனை ஆண்டுகள் படிக்க வேண்டும், அதிக செலவாகுமா என ஏராளமான கேள்விகளுடன் தயங்கி நிற்பவர்களே அதிகம்.
அவ்வாறான தயக்கத்தைப் போக்கும் வகையில், ஐஏஎஸ் படிப்பதற்கான தெளிவைத் தரும் நோக்கில் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ நிகழ்ச்சி, கல்லூரி மாணவர்களுக்காக நடத்தப்பட உள்ளது. சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வரும் 28-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் ஒடிஷா மாநில முதல்வரின் முதன்மை ஆலோசகர் ஆர்.பாலகிருஷ்ணன் ஐஏஎஸ், நுண்ணறிவுப் பிரிவு காவல் துணை ஆணையர்ஆர்.திருநாவுக்கரசு ஐஏஎஸ், ‘இந்து தமிழ்’ நாளிதழின் நடுப்பக்க ஆசிரியர் சமஸ், கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பேராசிரியர் சத்யஸ்ரீ பூமிநாதன் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரையாற்ற இருக்கிறார்கள். காலை 9 மணிக்குத் தொடங்கும் இந்த நிகழ்ச்சி மதியம் 1 மணி வரை நடைபெறும்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும், அனைத்து தேர்வு மாதிரி வினாத்தாள், பாடத்திட்ட கையேடு இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், தேர்வு செய்யப்படும் 3 பேருக்கு இலவசப் பயிற்சியும் கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி சார்பில் வழங்கப்பட உள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர் 9444227273 என்ற செல்போன் எண்ணுக்கு, தங்களது பெயர், கல்வித் தகுதி, தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களைக் குறுந்தகவலாக (எஸ்எம்எஸ்) அனுப்பி, பதிவுசெய்து கொள்ளலாம்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews