காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறியது - தப்புமா தமிழ்நாடு? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, April 27, 2019

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறியது - தப்புமா தமிழ்நாடு?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைப்பெற்றிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை அதன்பின் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. அந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று காலை தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில் தற்போது புயலமாக மாறியுள்ளது. அந்தப் புயலுக்கு ஏற்கெனவே ஃபானி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி ஃபானி புயல் நேரடியாக தமிழக கரையைக் கடக்க வாய்ப்பில்லை எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் புயல் குறித்து தமிழக மக்கள் அச்சப்பட தேவையில்லை. அதேசமயம் இந்தப் புயலால் மழை வருமா..? வராதா என்பது புயல் நகர்வை பொருத்தே தெரியவரும் எனக் கூறப்படுகிறது.
இதனிடையே தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் இதுகுறித்து கூறும்போது, புயல் ஒருவேளை தமிழகத்தை நெருங்கி வந்தால் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதேசமயம் புயல் விலகி சென்றுவிட்டால் நிலப்பரப்பின் ஈரப்பதம் வெகுவாக குறைந்து தமிழகத்தில் கடுமையான அனல் காற்று வீசும் எனக் கூறியுள்ளார். இருப்பினும் அந்த நிலவரம் புயல் நகர்வை பொருத்து நாளையே தெரியவரும் எனக் கூறியுள்ளார். தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைப்பெற்றிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது இன்று மாலை புயலாக வலுப்பெறக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடதமிழகத்தின் கடற்கரையில் இருந்து சுமார் ஆயிரத்து 340 கிலோமீட்டர் தொலைவில் இந்த தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலைகொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், இன்றிரவு 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பிருப்பதாகக் கூறியுள்ளது. இன்று மாலை புயலாகவும், நாளை இரவு 11 மணிக்கு மேல் தீவிர புயலாகவும் மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வரும் 30 ஆம் தேதியன்று மாலையில் வட தமிழக கடற்கரை அருகே நெருங்கக் கூடும் என்றும், இதன் காரணமாக அன்றைய தினமும், மே ஒன்றாம் தேதியும் தமிழகத்தின் வடக்கு கடலோரப் பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையே சென்னையில் தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பேரிடர் மேலாண்மை ஆணையர் சத்யகோபால், வருவாய்துறைச் செயலாளர் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றனர். புயல் தாக்கும் பட்சத்தில் எடுக்க வேண்டிய முன்னேற்பாடு ந‌டவடிக்கைகள் ‌குறித்து ஆலோசிக்கப்‌பட்டன. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், புயலை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்தார்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews