தரவரிசை பட்டியலில் முன்னேற்றம் புதுச்சேரி பல்கலை கழகம் சாதனை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 10, 2019

தரவரிசை பட்டியலில் முன்னேற்றம் புதுச்சேரி பல்கலை கழகம் சாதனை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
தேசிய தரவரிசை பட்டியலில் புதுச்சேரி பல்கலை கழகம் முன்னேரி சாதனை படைத்துள்ளது. பன்னாட்டு அளவில் புகழ் பெற்ற தேசிய தரவரிசை கட்டமைப்பு கல்வி ஆய்வு நிறுவனம், இந்தியாவில் அனைத்து பல்கலைக் கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களை ஆராய்ந்து ஆண்டுதோறும் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது.
கல்வி போதிக்கும் முறை, மாணவர்கள் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு வசதிகள், ஆய்வுக்கூடங்கள், தொழில் முறை சார்ந்த பயிற்சி முறைகள், மாணவர்களின் தனித் தன்மை, பேராசிரியர்களின் அணுகுமுறை, அர்ப்பணிப்பு போன்ற பல்வேறு அளவீடுகளில் ஆய்வுகளையும், கட்டமைப்புகளை ஆய்வு செய்து தரவரிசை பட்டியல் வெளியிடுகிறது. தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த தரமதிப்பீடு என்பதால் கடந்த 2016ம் ஆண்டு முதல் புதுச்சேரி பல்கலைக் கழகம் பங்கேற்று வருகிறது. 2019ம் ஆண்டிற்கான தரவரிசைப் பட்டியலை தேசிய தரவரிசை கட்டமைப்பு நிறுவனம் மேற்கொண்டது. அதில், கடந்த ஆண்டு தரவரிசைப் பட்டியலில் 42.36 புள்ளிகளை பெற்ற புதுவைப் பல்கலைக் கழகம், இந்த ஆண்டு 44.88 புள்ளிகள் பெற்று முன்னேறி உள்ளது. 59 வது இடத்திலிருந்து 11 இடங்கள் முன்னேறி 48 வது இடைத்தை அடைந்துள்ளது.
மேலும், உயர்கல்வி, ஆராய்ச்சி, வேலை வாய்ப்பு, கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், பேராசிரியர்களுக்கான பயிற்சி முகாம்கள் போன்றவற்றின் மூலம் பன்னாட்டு அளவிலான பல்வேறு நிறுவனங்கள் புதுச்சேரதி பல்கலைக் கழகத்துடன் தொடர்பில் உள்ளது. இந்திய அளவில் தேசிய தரவரிசை கட்டமைப்பு நிறுவனத்தின் தரவரிசை பட்டியலை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார். தேசிய தரவரிசை பட்டியலில் முன்னேறியுள்ளதையடுத்து, பல்கலைக் கழக வளர்ச்சியில் உறுதுணையாக இருந்த வரும் அனைத்து புல முதன்மையர்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அதிகாரிகள், ஊழியர்கள், மாணவர்கள் அனைவருக்கும் துணைவேந்தர் குர்மீத் சிங் நன்றி தெரிவித்துள்ளார்.
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews