👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
குழந்தைகளுக்கு நாம் பேசும் சொற்கள் நல்லவையா, அதன் அர்த்தம் என்ன என்பதெல்லாம் புரிய சில வருடங்களாகலாம். அதுவரை அவர்களுக்கு பொம்மைகளும், உடன் விளையாடும் நண்பர்களும் உற்ற தோழர்களாகிறார்கள். சரி, இந்த இடத்தில் பெற்றோர்களின் பணி என்ன... குழந்தைகள் விளையாட்டாகச் செய்யும் ஒரு செயலை ஏன் கண்டிக்க வேண்டும், அதன் அர்த்தத்தை அவர்களுக்கு ஏன் புரிய வைக்க வேண்டும்? உதாரணமாக நம் பக்கத்துவீட்டில் அடிக்கடி கத்திப் பேசி சண்டை போடுவதைக் கேட்கும் குழந்தைகள் அவர்களைப் போலவே பேசி நடித்துக்காட்டுவர். ஓ இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டுமா என்று தாங்களாகவே ஒரு முடிவுக்கு வருவார்கள். குழந்தைகள் முன் பெற்றோர்கள்கூட சண்டையிடக்கூடாது என்று சொல்வது இதன் காரணமாகத்தான்.
குழந்தைகளுக்கு முதல் நண்பர்கள், காட்சிகள், கற்பனை வாழ்வு எல்லாமே பெற்றோர்கள்தாம். பெற்றோர்களிடமிருந்தே நல்லதையும், கெட்டதையும் கிரகித்துக் கொள்கிறார்கள். அம்மாவையோ அப்பாவையோ முன்மாதிரியாகக் கொண்டு குழந்தைகள் பின்பற்றுவதைப் போல பெருமையான விஷயம் வேறெதுவும் இருக்க முடியாது. * குழந்தைகளின் காதுகள் எந்நேரமும் திறந்தே இருக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் குழந்தையுடன் இருந்துகொண்டு மற்றவர்களிடம் பேசினாலும் சரி... உங்கள் வீட்டில் உள்ளவர்களுடன் பேசினாலும் சரி... வார்த்தைகளில் கவனமாக இருங்கள். * குழந்தைகளின் குறைகளை காயப்படுத்தாமல் சுட்டிக் காட்டலாம். பிறரைக் குறைவாக எடைபோடக்கூடாது என்பதைக் குழந்தைகள் இதன்வழியே கற்றுக்கொள்வர்.
* உணவை மீதம் வைக்காமல் சாப்பிட முதலில் பெற்றோர்கள் பழக்க வேண்டும். குழந்தைகள் உங்கள் அறிவுரைகளை விட செயல்களைத்தான் அதிகம் கவனிக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். * படுக்கையிலிருந்து எழுந்ததும் உங்கள் படுக்கையை நீங்கள் நேர்த்தியாய் மடித்து வையுங்கள். காரணம் நாம் ஒரு செயலை நேர்த்தியாகக் கடைப்பிடித்தால்தான் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருக்கவோ அல்லது அறிவுறுத்தவோ தகுதியானவர்கள் ஆகிறோம். அதே போன்று எடுத்த பொருளை எடுத்த இடத்திலேயே வைக்கப் பழகுங்கள். தங்கள் பொருள்களை கையாளும் நேர்த்தியைக் குழந்தைகள் இதன்மூலம் தெரிந்து கொள்வர்
* செய்த தவற்றினை தயக்கமின்றி ஒத்துக்கொள்ள பழகுங்கள். அது உங்கள் குழந்தைகளிடமே ஒத்துக்கொள்வதாக இருந்தாலும் நிச்சயம் செய்யுங்கள். எக்காரணம் கொண்டும் சூழ்நிலை மீதோ, பிறர் மீதோ பழி சுமத்தாதீர்கள். தன் தவற்றை தானே ஒப்புக்கொள்ள நீங்கள் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருங்கள். * பொருளாதார பாகுபாடின்றி நண்பர்களோடு எப்போதும் தொடர்பில் இருங்கள். இதைப் பார்த்து வளரும் உங்கள் குழந்தைகளுக்கு நட்பின் உன்னதம் மனதில் ஆழமாய்ப் பதியும். * உங்கள் பெற்றோர்களிடம் பிரத்யேகமாய் நேரம் ஒதுக்கி (அவர்கள் ஊரிலிருந்தாலும் அல்லது உங்களோடு இருந்தாலும்) தினமும் பேசுங்கள். உங்களுடைய இந்தச் செயல் கற்றுத்தரும் விழுமியம் நூலகத்தின் எந்தப் புத்தகமும் கற்றுத்தர முடியாது. * உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
அளவுக்கு அதிகமாய் உண்பதைத்தவிர்த்தல், உடற்பயிற்சி மேற்கொள்ளுதல், சரியான நேரத்திற்குத் தூங்குதல், பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்தல் போன்றவற்றைக் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தல் அவசியம். * உங்கள் குழந்தைக்கு நீங்கள் முன்மாதிரியாக நாம் இருப்பதற்காக பிரத்யேகமாய்ப் புதிதாய் எதையும் செய்யத் தேவையில்லை. நம் அன்றாடச் செயல்பாடுகளில் சின்னச் சின்ன மாறுதல்களை நிரந்தரமாய்க் கொண்டுவந்தாலே போதும். குழந்தைகள் வேறு யாரையாவது முன்மாதிரியாக எடுத்துக்கொண்டால் கோபம் கொள்ளாமல், அவர்கள் தேர்ந்தெடுத்த நபரின் பலம் பலவீனத்தை ஆராய்ந்து குழந்தைக்கு தீமை ஏதும் இல்லை என்ற பட்சத்தில் ஊக்கப்படுத்துங்கள்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U