👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்குச் செல்கிறார்கள். இத்துறைகளில் சிறந்த கல்வி நிறுவனத்தில் படிக்க கடுமையான போட்டி நிலவுகிறது. ஆனால், இவற்றுக்குச் சமமமாக எப்போது கணிசமான மாணவர்களைக் கவரும் பிற படிப்புகளும் உள்ளன.
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் பள்ளிப் படிப்பு முடிகிறது. அடுத்து என்ன படிக்கலாம், எந்தக் கல்லூரியில் படிக்கலாம்? என யோசிக்கும் மாணவர்களுக்கு வழிகாட்டும் சில ஆலோசனைகள்.
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்குச் செல்கிறார்கள். இத்துறைகளில் சிறந்த கல்வி நிறுவனத்தில் படிக்க கடுமையான போட்டி நிலவுகிறது. ஆனால், இவற்றுக்குச் சமமமாக எப்போது கணிசமான மாணவர்களைக் கவரும் பிற படிப்புகளும் உள்ளன.
நண்பர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள் என யாரோ நிர்பந்திக்கும் காரணத்தால் அவர்கள் சொல்லும் படிப்பில் சேர்வதை மாணவர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். விருப்பமான பாடம் சார்ந்த துறையில் பட்டப்படிப்பை தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு தேர்வு செய்ய என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்பதைப் பார்ப்போம்.
கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல் அல்லது உயிரியல் பாடங்களைப் படித்தவர்களும் தொழிற்படிப்பு படித்தவர்களும் பொறியியல் படிப்பில் சேரலாம். பொறியியல் படிப்பில் சேரும்போது கலந்தாய்வு மூலம் சிறந்த கல்லூரியை தேர்வு செய்ய வேண்டும் என்பதை முக்கியமாகக் கொள்ள வேண்டும். அதற்கு ஏற்ப சிறப்பான மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.
வழக்கமான மெக்கானிக்கல், இசிஇ, இஇஇ, சிவில் போன்ற படிப்புகளை விட பயோ மெடிக்கல், பயோ டெக்னாலஜி, புட் புராஸசிங், ஜெனட்டிக்ஸ் போன்றவற்றை முதன்மைப் பாடமாகக் கொண்ட படிப்பைத் தேர்வு செய்வது சிறப்பானது. சிவில் எஞ்சினியரிங் படிப்புக்குப் பதிலாக பி.ஆர்க் சேர NATA தேர்வு எழுதலாம். இப்படி பல மாற்று வாய்ப்புகள் பொறியியல் துறையிலேயே உள்ளன.
பெரும்பாலனவர்கள் தேர்வு செய்யும் எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம் போன்ற மருத்துவப் படிப்புகளுக்கும் மாற்று உள்ளது. நீட் தேர்வு எழுதாமலே மருத்துவத் துறையில் வேலைக்குப் போகும் வாய்ப்பு அறிவியல் பிரிவில் படித்த மாணவர்களுக்கே அதிகமாகக் கிடைக்கும். சித்த மருத்துவம், ஹோமியோபதி, ஆயுர்வேதம், யுனானி, இயற்கை மருத்துவம் போன்றவற்றையும் படிக்கலாம். பிசியோதெரப்பி, பார்மசி, நர்ஸிங் உள்ளிட்ட படிப்புகளில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.
விவசாயம் குறித்து தற்போதைய மாணவர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. அவர்கள் வேளாண் துறையில் உள்ள பல்வேறு படிப்புகளில் சேரலாம். அக்ரிகல்ச்சர், ஹர்டிகல்ச்சர், வேளாண் சார் புள்ளியியல் என பல முக்கிய வேலை வாய்ப்பு உள்ள படிப்புகள் உள்ளன. மீன்வளம், கால்நடை மருத்துவம் போன்ற படிப்புகளும் இருக்கின்றன.
இளநிலை அறிவியல் படிப்பு படிக்க விரும்புவோர் இயற்பியல், வேதியியல், கணிதம், தாவரவியல், உயிரியல் ஆகிய பிரிவுகளை பலரும் தேர்வு செய்வார்கள். இவற்றுக்கு இணையான படிப்புகளாக தரவு அறிவியல், நுண்ணுயிரியல், புள்ளியியல் படிப்புகளும் உள்ளன. கணக்குப்பதிவியல் பிரிவைத் தேர்ந்தெடுத்தவர்கள் சி.பி.டி. தேர்வில் வெற்றி பெற்றால் நேரடியாக சி.ஏ. பயிற்சி பெறலாம். பி.காம், பி.ஏ படிக்க விரும்பினால் ஐ.இ.டபிள்யூ.ஏ.ஐ. தேர்வு மற்றும் ஐ.சி.எஸ்.ஐ. நிறுவனங்களில் பயிற்சி பெறலாம்.
போட்டித் தேர்வில் வெற்றி பெற்று பணிக்குச் செல்ல முடிவு செய்யும் மாணவர்கள் கலைப் படிப்புகளை தேர்வு செய்யலாம். தமிழ்நாடு இசைப் பல்கலைக்கழகத்தில் நடனம், இசை துறைகளிலும் தமிழ்நாடு திரைப்படக் கல்லூரியில் நடிப்பு, டைரக்ஷன் துறைகளிலும் சிறப்பான கல்வி வாய்ப்புகள் உள்ளன. ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, அனிமேஷன், எடிட்டிங் போன்றவற்றில் ஆர்வம் கொண்டவர்கள் விஷுவல் கம்யூனிகேஷன் படிக்கலாம். ஊடகத்துறையில் ஆர்வம் உள்ளவர்களும் இந்தப் படிப்பில் சேரலாம். அல்லது இதழியல் படிப்பைத் தேர்ந்தெடுக்கலாம். தற்போது பிரத்யேகமாக இணைய ஊடகம் சார்ந்த படிப்புகளும் பரவலாகி வருகின்றன.
சிற்பக்கலை ஈடுபாடு இருந்தால் மாமல்லபுரம் சிற்பக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம். பள்ளியிலேயே விளையாட்டுகளில் சிறந்து விளங்கியவர்கள் தமிழ்நாடு உடற்கல்வி பல்கலைக்கழகத்தில் யோகா, விளையாட்டு உள்ளிட்ட படிப்புகளில் சேர்ந்து படிக்கலாம். சட்டப்படிப்பு படிக்க விரும்புகிறவர்கள் தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்கலாம்.
சென்னையில் உள்ள கடல்சார் பல்கலைக்கழகம் நடத்தும் நுழைவுத்தேர்வு எழுதி, கடல்சார் படிப்புகளில் சேரலாம். `சென்னை ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ்’ கல்வி நிறுவனத்தில் பொருளாதாரம் சார்ந்த படிப்புகளைப் படிக்கலாம்.
இவை தவிர சிபிஎஸ்இ நிறுவனம் மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் விதமாக அண்மையில் வெளியிட்டிருக்கும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 113 படிப்புகளிலிருந்து பிடித்தமான படிப்பை தேர்வு செய்யலாம்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U