+2 பொதுத் தேர்வு முடிந்துவிட்டது. அடுத்ததாக என்ன படிக்கலாம்? அறிவோம் டிபன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ்ட் டெக்னாலஜி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, April 03, 2020

+2 பொதுத் தேர்வு முடிந்துவிட்டது. அடுத்ததாக என்ன படிக்கலாம்? அறிவோம் டிபன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ்ட் டெக்னாலஜி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
இந்திய ராணுவத்தின் பலத்தை அதிகரிக்கவும், தொழில்நுட்ப ரீதியாக வலுப்பெறச் செய்யவும் மத்திய பாதுகாப்புத் துறையால் உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனமே டிபன்ஸ் இனஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ்ட் டெக்னாலஜி!

முக்கியத்துவம்:
1952ம் ஆண்டு ‘இன்ஸ்டிடியூட் ஆப் ஆர்ம்மெண்ட் டெக்னாலஜி’ (ஐ.ஏ.டி.,) என்கிற பெயரில் துவங்கப்பட்ட இந்த கல்வி நிறுவனம், 2006ம் ஆண்டு ’டிபன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ்ட் டெக்னாலஜி’ (டி.ஐ.ஏ.டி) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
மகாராஷ்டிராவின் புனே நகரில் அமைந்துள்ள இந்த கல்வி நிறுவனம் ஏ.ஐ.சி.டி.இ., அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட ராணுவ தொழில்நுட்பம் சார்ந்த முதுநிலை பட்டப்படிப்புகளை மட்டும் கடந்த 40 ஆண்டுகளாக வழங்கி வருகிறது. இங்கு பட்டப்படிப்புகள் மட்டுமின்றி 52க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து தொழில்நுட்ப ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டு வருகிறது.

இந்திய நாட்டின் பாதுகாப்பிற்காக ‘நாவிகேஷன் சிஸ்டம்ஸ், வயர்லெஸ் சென்சார்ஸ், எபிஷியண்ட் புரோபல்ஷன் சிஸ்டம்ஸ், வெப்பன் சிஸ்டம்ஸ் பார் டி.ஆர்.டி.ஓ, டிபன்ஸ் சர்வீசஸ்’ ஆகிய தொழிநுட்ப்க சாதனங்களை வடிவமைப்பதற்கான பயிற்சிகள் இங்கு வழங்கப்படுகிறது.
துறைகள்:
 ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்
 கம்பியூட்டர் இன்ஜினியரிங்
 எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்
 மெட்டீரியல் இன்ஜினியரிங்
 மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
 பயோ-சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி
 டெக்னாலஜி மேனேஜ்மெண்ட்
 அப்ளைட் கெமிஸ்ட்ரி
 அப்ளைட் மாத்தமெடிக்ஸ்
 அப்ளைட் பிசிக்ஸ்

படிப்புகள்:
 எம்.டெக் - 2 ஆண்டுகள்
 பிஎச்.டி - 3 முதல் 5 ஆண்டுகள்
தகுதிகள்:
முதுநிலை பட்டப்படிப்பிற்குத் தொழில்நுட்ப பொறியியல் சார்ந்த பிரிவில் இளநிலை பட்டப்படிப்பைப் பெற்றிருக்க வேண்டும். தேசிய தகுதித் தேர்வான ‘கேட்’ தேர்வினை எழுதியிருக்க வேண்டும். முக்கியமாக 26 வயது மிகாதவராக இருப்பதும் அவசியம். பிஎச்.டி., படிப்பிற்கு துறை சார்ந்த பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மாணவர்களின் கல்வித் திறனிற்கு ஏற்ப பல உதவித்தொகைகளும் இங்கு வழங்கப்படுகிறது.
விபரங்களுக்கு: https://diat.ac.in/
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews