தமிழக அரசியல்வாதிகளின், தேர்தல் அரசியலில் சிக்கி, நீட் தேர்வுக்கு படிக்க வேண்டுமா, வேண்டாமா என, குழம்பி போய் உள்ளனர், மருத்துவராகும் கனவில் உள்ள மாணவர்கள்.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தேசிய அளவில் நடக்கும், நீட் தேர்வு மூலம், மருத்துவப் படிப்பிற்காக, மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். மற்ற மாநிலங்களில், சத்தமில்லாமல், இந்த தேர்வு முறை நடக்கிறது. தமிழகத்தில் மட்டும் தான், நீட் தேர்வில், அரசியல் ஆதாயம் காண்கின்றன, கட்சிகள்.தமிழகத்திலும், நீட் முறையில், &'மெரிட்&' படி, மாணவர்கள் தேர்வாகி, கல்லுாரிகளுக்கு நன்கொடை தராமல், எம்.பி.பி.எஸ்., படித்து வருகின்றனர்.
தற்போது, தேர்தல் நேரம் என்பதால், கட்சிகள் அதை, தேர்தல் கோஷமாக மாற்றியுள்ளன. அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், &'தமிழகத்திற்கு, நீட் தேர்வுக்கு, விலக்கு கேட்கப்படும்&' என, அறிவித்தது. தி.மு.க., தேர்தல் அறிக்கையில், &'நீட் தேர்வு, ரத்து செய்யப்படும்&' என அறிவித்தது. நீட் தேர்வு குறித்து, மத்திய அரசு தான், முடிவு எடுக்க வேண்டும். பா.ஜ., தேர்தல் அறிக்கையில், இது பற்றி எதுவும் கூறவில்லை. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், &'நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மாநிலங்களில், நுழைவுத் தேர்வு நடத்தப்படும்&' என, அறிவித்துள்ளது.
காங்கிரசின் கூட்டணி கட்சியான, தி.மு.க.,வின் கோரிக்கையே, &'நுழைவுத் தேர்வு வேண்டாம்&' என்பது தான். நீட் வருவதற்கு முன், தமிழகத்தில், மருத்துவ படிப்பிற்கு நுழைவுத் தேர்வு இருந்தது. அதை நீக்கியது, தி.மு.க.,ஆட்சி தான். அறிவிக்கப்பட்டபடி, இந்தாண்டிற்கான, நீட் தேர்வு, மே, 5ல், நிச்சயம் நடக்கும். ஆனால், எழுதிய நீட் தேர்வுப்படி, ஜூனில் அட்மிஷன் நடக்குமா என்பது தான், புதிர்.
ஏனெனில், மத்தியில், காங்., ஆட்சி அமைந்தால், நீட் தேர்வை ரத்து செய்யும். இந்த விவகாரம், இப்போதே சிந்தனையில் ஓடுவதால், தேர்வுக்கு படிப்பதில், மாணவர்கள் குழம்பி போய் உள்ளனர். &'எப்படியும், நீட் தேர்வு எழுதி, வெற்றி பெற வேண்டும்&' என, பள்ளிக்கு செல்வது போல், பயிற்சி மையங்களில், லட்சக்கணக்கான ரூபாய் கட்டணம் செலுத்தி, ஓரிரண்டு ஆண்டாக, மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களும், தொடர்ந்து படிப்பதா, பணத்தை செலவு செய்வதா என்ற, தவிப்பில் உள்ளனர்.
மாணவர்களே... சமூகத்திற்கு, ஆரோக்கியமான எதிர்காலம் அமைய வேண்டும் என்ற, உன்னதமான குறிக்கோளுடன் நீங்கள், மருத்துவம் படிக்க ஆசைப்படுகிறீர்கள்.தேர்தல் அரசியலுக்காக, நீட் தேர்வில், தி.மு.க.,வும், காங்கிரசும், உங்கள் கண்ணைக் கட்டி, கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுகின்றன. இந்தக் கண்கட்டை அவிழ்த்து, தெளிவான பார்வைக்கு தயாராகுங்கள் மாணவர்களே!
-வி.ஆர்.குமார், பாலக்காடு, கேரளாவிலிருந்து அனுப்பிய, &'இ - மெயில்&' கடிதம்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U