ஒருமையில் பேசிய கல்வி அதிகாரியை கண்டித்து...விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் போராட்டம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 10, 2019

ஒருமையில் பேசிய கல்வி அதிகாரியை கண்டித்து...விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் போராட்டம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
மதுரையில் விடைத்தாள் திருத்தும் பணி செய்ய வந்த ஆசிரியர்களை மாவட்ட கல்வி அதிகாரி மீனாவதி ஒருமையில் பேசியதால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் மதுரை - மேலுார் கல்வி மாவட்டங்களுக்கு கேப்ரன் ஹால் பள்ளி, திருமங்கலம் - உசிலம்பட்டி கல்வி மாவட்டங்களுக்கு கேரன் பள்ளி, பத்தாம் வகுப்பிற்கு அண்ணாமலையார் மற்றும் டி.கல்லுப்பட்டி எம்.எஸ்.ஆர்., பள்ளியில் நடக்கின்றன.
அண்ணாமலையார் பள்ளியில் திருத்தும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் சிலர் தாமதமாக நேற்று பணிக்கு வந்ததால் அவர்களை தாமத வருகை பதிவேட்டில் கையெழுத்திட முகாம் பொறுப்பாளர் மீனாவதி உத்தரவிட்டார். பிரதான நுழைவு 'கேட்'டும் மூடப்பட்டது. இதனால் ஆசிரியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மீனாவதி ஒருமையில் பேசியதால் அதிருப்தியடைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக அறைக்குள் இருந்த ஆசிரியர்கள் வெளியேறி போராட்டத்தில் பங்கேற்றனர். திருத்தும் பணி நிறுத்தப்பட்டது. முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆசிரியர்களிடம் மீனாவதி மன்னிப்பு கேட்டதைதொடர்ந்து ஆசிரியர்கள் மீண்டும் பணிக்கு திரும்பினர்.
அனுபவமில்லாத ஆசிரியர்களுக்கு பணியா: திருத்தும் பணியில் அனுபவமில்லாத ஆசிரியர்கள் சிலருக்கும் பணி வழங்கப்பட்டதாகவும், அவர்கள் 'கீ ஆன்சரை' படித்துவிட்டு திருத்த அறிவுறுத்தப்பட்டதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.ஆசிரியர்கள் கூறுகையில், "பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பாடம் நடத்தும் மெட்ரிக் ஆசிரியர்கள் பலர் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கூடுதலாக தேவைப்படும் பட்சத்தில் ஒரு ஆசிரியர் பரிந்துரைத்த மற்றொரு ஆசிரியரை திருத்தும் பணிக்கு அழைக்கப்பட்டதால் ஏற்பட்ட குழப்பம் தான் இது. தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டார்களா என தேர்வுத்துறை விசாரிக்க வேண்டும்" என்றனர்.
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews