👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
தஞ்சாவூரில் 6 வயது சிறுவன், உலகத்தில் உள்ள 196 நாடுகளின் கொடிகளை வைத்து, அந்நாடுகளின் தலைநகரம், வரலாற்றை கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார்.
தஞ்சாவூர் அழகம்மாள் நகரைச் சேர்ந்தவர் ஞானசுந்தரம், சிட்டி யூனியன் வங்கி ஊழியர். இவரது மனைவி சவுமியா, அக்குபஞ்சர் மருத்துவர். இவர்களது மகன் மனோமிதன்(6), தஞ்சாவூரில் உள்ள தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், பள்ளியில் பொது அறிவு போட்டியில் மனோமிதன் கலந்துகொண்டு, முதலிடம் பிடித்துள்ளார். இதையடுத்து, மனோமிதனுக்கு அவரது பெற்றோர், பொது அறிவு தொடர்பான பயற்சிகளை கடந்த 5 மாதங்களாக அளித்து வந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, தற்போது மனோமிதன் பொது அறிவில் மிகச் சிறந்து விளங்குகிறார். அவரிடம் 196 உலக நாடுகளின் கொடிகளை காட்டினால், அவை எந்தெந்த நாட்டின் கொடிகள், அவற்றின் தலைநகரங்கள், வரலாறு போன்றவற்றை துல்லியமாகக் கூறி அசத்துகிறார்.
மேலும், இந்தியாவில் இதுவரை பதவி வகித்த குடியரசுத் தலைவர்கள், துணை குடியரசுத் தலைவர்கள் பிரதமர்கள் மற்றும் பல்வேறு தலைவர்கள் குறித்தும், அவர்கள் பதவியில் இருந்த ஆண்டுகள், செயல்படுத்திய திட்டங்கள் என அனைத்தையும் சிறிதும் யோசிக்காமல் உடனுக்குடன் கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார். இதேபோல, இந்தியாவில் உள்ள கடல்களின் பெயர்கள், அவற்றின் தன்மை மற்றும் எந்தெந்த கடலில் என்னென்ன வகை உயிரினங்கள் வாழ்கின்றன என்பதையும் கூறுகிறார்.
இந்நிலையில், அப்பகுதியில் உள்ள அரசு நூலகத்தில் வாசகர்கள் வட்டம் சார்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற உலக புத்தக தின விழாவிலும், 196 நாடுகளின் கொடிகளை வைத்து தலைநகரத்தை கூறி அனைவரின் பாராட்டையும் பெற்றார்.
இதுகுறித்து, மனோமிதனின் தாய் சவுமியா கூறும்போது, “அடுத்தகட்ட முயற்சியாக இந்திய வரைபடத்தை கொண்டு, அனைத்து நாடுகளுக்கும் செல்லும் வழிகள் குறித்து பயிற்சி அளிக்க உள்ளோம். கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறோம்” என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U