மாணவர்கள் எளிதாக பங்கேற்கும் வகையில் இன்ஜி. கவுன்சலிங்கில் பங்கேற்க 42 உதவி மையங்கள் அமைப்பு : தொழில் நுட்பக் கல்வி இயக்கம் தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, April 26, 2019

மாணவர்கள் எளிதாக பங்கேற்கும் வகையில் இன்ஜி. கவுன்சலிங்கில் பங்கேற்க 42 உதவி மையங்கள் அமைப்பு : தொழில் நுட்பக் கல்வி இயக்கம் தகவல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
இன்ஜினியரிங் கவுன்சலிங்கில் பங்கேற்பதற்கான 42 உதவி மையங்களின் பெயர்களை தொழில்நுட்பகல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.இன்ஜினியரிங் கவுன்சலிங்கை இந்த ஆண்டு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்துகிறது. இந்நிலையில் இன்ஜினியரிங் கவுன்சலிங் விண்ணப்பித்தல், விருப்ப கல்லூரியை தேர்வு செய்வதல், சான்றிதழ் சரிபார்ப்புக்கான 42 இன்ஜினியரிங் கவுன்சலிங் உதவி மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.இன்ஜினியரிங் கவுன்சலிங்குக்கு மாணவர்கள் வீட்டிலிருந்தபடியும் இணையதளம் மூலம் மே 2ம் தேதி முதல் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க முடியாதவர்கள் இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை உதவி மையங்களில் சமர்ப்பிக்கலாம். பெரிய மாவட்டம் அல்லது பெருநகரத்துக்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உதவி மையங்கள், சிறிய மாவட்டத்துக்கு ஒரு உதவி மையமும் அமைக்கப்படுகிறது. மாணவர்கள் தங்கள் வசிப்பிடத்துக்கு அருகாமையில் உள்ள இன்ஜினியரிங் கவுன்சலிங் உதவி மையத்தில் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம். இணையதளத்தில் விண்ணப்பித்தாலும் இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை உதவி மையத்தில் மாணவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க வேண்டும்.
மாவட்ட வாரியாக 42 இன்ஜினியரிங் உதவி மையங்களின் பெயர்கள் வருமாறு: சென்னை: தரமணி சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரி. கடலூர்: திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி விருதாச்சலம் மற்றும் போக்கல்டி ஆப் இன்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி, அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம். காஞ்சிபுரம்: பச்சையப்பாஸ் பெண்கள் கல்லூரி மற்றும் ஐஆர்டி பாலிடெக்னிக் கல்லூரி குரோம்பேட்டை.திருவள்ளூர்: முருகப்பா பாலிடெக்னிக் கல்லூரி ஆவடி.திருவண்ணாமலை: அரசு பாலிடெக்னிக் கல்லூரி செய்யாறு.வேலூர்: தந்தை பெரியார் அரசு தொழில் நுட்பக் கழகம், பாகாயம். விழுப்புரம்: அரசு பாலிடெக்னிக் கல்லூரி, சங்கராபுரம் மற்றும் திருக்கோவிலூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி.கோயம்புத்தூர்: அரசு பாலிடெக்னிக் கல்லூரி பீளமேடு, அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி புதுசித்தாபுதூர் மற்றும் கோயம்புத்தூர் இன்டிட்யூட் ஆப் டெக்னாலஜி.தர்மபுரி: செட்டிகரையில் உள்ள அரசு இன்ஜினியரிங் கல்லூரி, ஈரோடு சக்தி பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரி பெருந்துறை ஆகிய இடங்களில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி: பர்கூரில் உள்ள அரசு இன்ஜினியரிங் கல்லூரி. நாமக்கல்: என்கேஆர் அரசு பெண்கள் கலைக்கல்லூரி.நீலகிரி: ஊட்டி அரசுக் கலைக்கல்லூரி.சேலம்: கருப்பூர் அரசு இன்ஜினியரிங் கல்லூரி. திருப்பூர்: சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி. கரூர்: தான்தோனிமலையில் உள்ள அரசுக் கலைக்கல்லூரி.
மதுரை: திருப்பரங்குன்றம் ரோட்டில் உள்ள தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் திருப்பரங்குன்றத்தில் உள்ள தியாகராஜர் இன்ஜினியரிங் கல்லூரி. ராமநாதபுரம்: இளையான்குடி அருகே உள்ள அரசு அரசுக் கலைக்கல்லூரி, தேனி: போடிநாயக்கனூரில் உள்ள அரசு இன்ஜினியரிங் கல்லூரி.திண்டுக்கல்: கரூர் ரோட்டில் அமைந்துள்ள ஜிடிஎன் கலைக்கல்லூரி. அரியலூர்: கீளப்பாலூர் கிராமத்தில் அமைந்துள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி. நாகப்பட்டினம்: பால்பண்ணைசேரியில் அமைந்துள்ள வாலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் கல்லூரி.பெரம்பலூர்: கிழக்கனவாயில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி.புதுக்கோட்டை: அறந்தாங்கியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி. தஞ்சாவூர்: ரெகுநாதபுரத்தில் அமைந்துள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் செங்கிபெட்டியில் உள்ள அரசு இன்ஜினியரிங் கல்லூரி. திருச்சி: ரங்கத்தில் உள்ள அரசு இன்ஜினியரிங் கல்லூரி மற்றும் துவாக்குடிமலையில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி. திருவாரூர்: வலங்கைமானில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி.சிவகங்கை: காரைக்குடியில் உள்ள ஏசி அரசு இன்ஜினியரிங் கல்லூரி. கன்னியாகுமரி: நாகர்கோவிலில் உள்ள சவுத் திருவாங்கூர் இந்து கல்லூரி, திருநெல்வேலி: அரசு இன்ஜினியரிங் கல்லூரி மற்றும் ராணி அண்ணா அரசு பெண்கள் கல்லூரி. தூத்துக்குடி: அரசு பாலிடெக்னிக் கல்லூரி, விருதுநகரில் வி.வி.வன்னியபெருமாள் பெண்கள் கல்லூரியிலும் இன்ஜினியரிங் கவுன்சலிங் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. பொறியியல் படிப்பிற்கு இணையதளம் வழியாக விண்ணப்பிக்க தமிழகம் முழுவதும் 42 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனால் இந்த படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த 42 உதவி மையங்களில் பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் நேரில் சென்று இலவசமாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். இந்த இலவச மையங்களை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது
பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்க மே 2ம் தேதி ஆன்லைன் பதிவு துவங்குகிறது என ஏற்கனவே தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews