👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
ஒரே பெயர் கொண்ட100க்கும் அதிகமான வாக்காளர்களை கொண்ட ஒரு கிராமம் தேர்தல் பணிபுரிய வருவோரை தலைசுத்த வைத்திருக்கிறது.
தமிழகம் முழுவதும் நாளை 38 மக்களவை தொகுதி மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மொத்தம் 65 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குசாவடிகளில் வாக்குப்பதிவு நடக்க உள்ள நிலையில், அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. நாளை வாக்குப்பதிவின் போது அரசு ஊழியர்கள், ஆசிரியர் பணியாளர்கள், காவல்துறையினர், ஓய்வுப் பெற்ற ராணுவத்தினர் என 3 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் ஈடுபடுத்தபட உள்ளனர்.
தேர்தல் பணிக்காக ஊழியர்களும் தயார் நிலையில் இருக்கின்றனர். இந்நிலையில் ஒரே பெயர் கொண்ட100க்கும் அதிகமான வாக்காளர்களை கொண்ட ஒரு கிராமத்தை கண்டு தேர்தல் பணி ஊழியர்கள் பெருமூச்சு விடுகின்றனர். பாப்பணம் என்ற இந்த கிராமம் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ளது. 2019 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் படி, பாப்பணம் கிராமத்தில் மட்டும் 395 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 100க்கும் அதிகமான வாக்காளர்களின் பெயர் முனியசாமி என்பதாக இருக்கிறது. ஒரு கிராமத்தில் இத்தனை முனியசாமிகளா என்று தேர்தல் பணிக்கு வருவோர் ஒவ்வொரு முறையும் குழப்பமடைவதாக கிராம மக்கள் கூறுகிறார்கள்.
தற்போது நடைபெற உள்ள 2019ம் ஆண்டு மக்களவை தோ்தல் மற்றும் பரமக்குடி சட்டமன்ற இடைத்தோ்தலுக்கு வரும் ஆசிரியர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகள், ஒரே பெயர் கொண்ட வாக்காளர்களை எப்படி கையாளப்போகிறார்கள் என்று பார்க்க காத்திருக்கிறார்கள் கிராம மக்கள் நகைச்சுவையாக தெரிவிக்கிறார்கள்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U