👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459

17 வது மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகிறது என தேர்தல் ஆணையம் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். வாக்குச்சாவடி மையங்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் கேட்க தனி ஆப் அறிமுகம் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மார்ச் 19-ம் தேதி வேட்பு ,மனு தாக்கல் தொடங்குகிறது. மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் மார்ச் 29-ம் தேதி முடிகிறது.
தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன... சுனில் அரோரா
தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன என சுனில் அரோரா தெரிவித்துள்ளார். விதிகளை மீறினால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 18 முதல் 19 வயதுக்குள் 1.5 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலை அமைதியாக நடத்த மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையினர் அதிக அளவில் குவிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி நடத்தப்படுகிறது: சுனில் அரோ
இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி நடத்தப்படுகிறது. மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரித்துள்ளார்.
டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தியாளர் சந்திப்பில் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சாவடிகளில் முறைகேடுகள் நடைபெறுகிறது என தெரிந்தால் மக்கள் நேரடியாக 1950 என்ற எண்ணிற்கு போன் செயலிமூலம் தொடர்புக்கொண்டு புகார் தெரிவிக்கலாம்.மக்களவை தேர்தலில் சமூகவலைத்தளங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும் எனவும் ஆணையர் சுனில் அரோரா கூறியுள்ளார்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்