பல்கலையில் பணம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 27, 2019

பல்கலையில் பணம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது


👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459

காமராஜ் பெயர் கொண்ட பல்கலையில் பணம் கொடுத்தால் தான் வேலை நடக்கும் என்ற சூழலை துணைவேந்தர் கிருஷ்ணன் மாற்ற வேண்டும் என சிண்டிகேட் உறுப்பினர்கள், கல்லுாரி முதல்வர்கள் வலியுறுத்தினர்.

பல்கலை கல்விப் பேரவை கூட்டம் துணைவேந்தர் கிருஷ்ணன் தலைமையில் நடந்தது. பதிவாளர் சின்னையா முன்னிலை வகித்தார். சிண்டிகேட் உறுப்பினர்கள் டாக்டர் ஆர்.லட்சுமிபதி, தீனதயாளன், ராமகிருஷ்ணன், கல்லுாரி முதல்வர்கள், பல்கலை பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
இதில் நடந்த விவாதம்: முத்துமாணிக்கம், பேராசிரியர்: துணைவேந்தர் பொறுப்பேற்ற பின் பல்கலை வளர்ச்சியை நோக்கி செல்கிறது.

கண்ணன், கல்லுாரி முதல்வர்: பல்கலையில் அக்.,ல் &'நாக்&' கமிட்டி ஆய்வு நடக்கும் நிலையில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்.

துணைவேந்தர்: புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சேர்க்கை அதிகரிக்கப்படும்.

அப்துல் காதிர், கல்லுாரி முதல்வர்: அரபி, உருது மொழி படிப்புக்கு பல்கலையில் புதிய துறை ஏற்படுத்த வேண்டும். கல்லுாரிகள் மற்றும் பல்கலை வேலைவாய்ப்பு மையங்களை இணைந்து செயல்பட வேண்டும்.

கண்ணன்: பி.எச்.டி., கைடுஷிப் பெற தகுதி என்ன. விதிமுறை பின்பற்றப்படுகிறதா.
லில்லிஸ் திவாகர், சிண்டிகேட்: யு.ஜி.சி., 2016ம் ஆண்டு விதிப்படி தகுதியுள்ளவருக்கு வழங்கப்படுகிறது.

கண்ணன்: சிலர் கல்லுாரியில் மட்டும் அனுமதி கொடுங்க. பல்கலையில் நாங்க &'பேசிக்கிறோம்&' என கூறுகின்றனரே. இதன் பின்னணி விசாரிக்கப்படுமா.

தீனதயாளன், சிண்டிகேட்: இதன் பின்னணியை கண்காணிக்க துணைவேந்தர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிறிஸ்டியனா சிங், கல்லுாரி முதல்வர்: தகுதி, திறமை அடிப்படையில் சுயநிதி கல்லுாரி பேராசிரியர்களுக்கும் கைடுஷிப் வழங்க வேண்டும்.

டாக்டர் ஆர்.லட்சுமிபதி, சிண்டிகேட் உறுப்பினர்: தகுதியான சுயநிதி கல்லுாரி பேராசிரியருக்கு &'கைடுஷிப்&' வழங்க வேண்டும். தன்னாட்சி கல்லுாரியில் படிக்கும் மாணவர் படித்தவுடன் வேலைக்கு செல்கிறார். அதுபோன்ற படிப்புகள் அங்கு உள்ளன.ஆனால் பல்கலையில் நடந்துபோனாலே சிலர் பணம் கேட்கின்றனர். வளர்ச்சியை பற்றி கவலைப்படுவதில்லை. காமராஜின் பெயரை தாங்கிய இங்கு எந்த வேலையும் பணம் இன்றி நடப்பதில்லை. 2017 ம் ஆண்டு பட்டச் சான்றிதழ் இன்னும் பலருக்கு கிடைக்கவில்லை. துணைவேந்தர் இதை கவனிக்க வேண்டும்.

நேரு, கல்லுாரி முதல்வர்: டாக்டர் ஆர்.லட்சுமிபதி கூறுவது உண்மை. இதே பல்கலையில் பி.எச்.டி., படிக்க ஒரு மாணவர் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். மீதம் 2 லட்சம் கொடுக்காததால் &'வைவா&' நடக்கவில்லை. அதற்கும் 50 ஆயிரம் ரூபாய் செலவிட வேண்டும். இது வேதனையான விஷயம்.

துணைவேந்தர்: யார் &'டிமான்ட்&' செய்கின்றனர். எங்கு தவறு நடக்கிறது. உரிய புகார் அளித்தால் உடன் நடவடிக்கை எடுக்கப்படும்.
தவமணி கிறிஸ்டோபர், கல்லுாரி முதல்வர்: இங்கு 60 சதவீதம் வரை சுயநிதி கல்லுாரி பேராசிரியரே உள்ளனர். நிரந்தர பணியில் பலர் உள்ளனர். அவர்களுக்கு &'கைடுஷிப்&' வழங்க வேண்டும்.

துணைவேந்தர்: இதுகுறித்து யு.ஜி.சி.,க்கு பரிந்துரை செய்யப்படும்.

நேரு: கல்வி பேரவை தேர்தல் நடத்தப்படவில்லை. மாணவர் நலன் கருதி தேர்வு கட்டணம் குறைக்க வேண்டும்.

பாரிபரமேஸ்வரன், சிண்டிகேட்: நன்னடத்தை விதி அமலில் உள்ளதால் லோக்சபா தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும்.

தீனதயாளன்: தேர்வு தாள் கட்டணம் ஏற்கெனவே குறைக்கப்பட்டுள்ளது. பட்டச் சான்று கட்டணம் ஒருமுறை கட்டினால் போதும். மீண்டும் செலுத்த தேவையில்லை.

வேண்டாம் &'புகழ்ச்சி&' கண்டித்த துணைவேந்தர்:

கூட்டம் துவங்கியதும் சிலர் துணைவேந்தரை புகழ்ந்து பேச துவங்கினர். அப்போது குறுக்கிட்ட அவர் "என்னை புகழ்ந்து பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம். நேரடியாக விஷயத்தை பேசுங்கள்" என்றார். ஆரம்பத்திலேயே அவர் எச்சரித்ததால் வழக்கம்போல் ‛புகழ்பாடும் களமாக&' நேற்றைய கூட்டம் இல்லாததை கல்வியாளர்கள் வரவேற்றனர்.

Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews