👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459

வழக்கு விசாரணையை இணையத்தில் ஒளிபரப்ப போவதாக நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் ஒரு பரபரப்பான உத்தரவை பிறப்பித்துள்ளார். மேலும் உயர்நீதிமன்றத்தில் நேரலை ஒளிபரப்புக்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக பதிவாளரை நேரில் அழைத்து உத்தரவு பிறப்பித்தார். மேலும் தமது அறையில் சிசிடிவி கேமரா பொறுத்தாதற்கும் நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி.யாக இருக்கக்கூடிய முருகன் மீதான பாலியல்புகார் தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஈஸ்.எம். சுப்ரமணியம் விசாரித்து வருகிறார். இந்த விசாரணையின் போது, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு உயர் அதிகாரிகள் அறையில் கண்காணிப்பு கேமரா பொறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். மேலும் இந்த புகார் தொடர்பாக சிபிசிஐடி-க்கு உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவுகளை எதிர்த்து ஐ.ஜி. முருகன் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அப்போது, இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், 2 தடை உத்தரவுகளை பிறப்பித்திருந்தது.
அதில், சிபிசிஐடி விசாரணைக்கு தடை மற்றும் அதிகாரிகளின் அறையில் கண்காணிப்பு கேமரா பொறுத்த தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அவர் ஒரு பரபரப்பான உத்தரவை பிறப்பித்துள்ளார். அதில் தன்னுடைய அறையில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று 4 வாரங்களுக்கு முன்பு உத்தரவிட்டதாகவும், ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்ற பதிவாளர் மேற்கொள்ளவில்லை என்று தனது அதிருப்தியை தெரிவித்தார். கண்காணிப்பு கேமரா பொறுத்த நிதி இல்லை என்றால் தனது சொந்த நிதியில் இருந்து தருவதாகவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாது, தனது நீதிமன்ற விசாரணையையும் இணையதளம் மூலம் நேரடியாக ஒளிபரப்ப உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என்றும், இதற்காக எவ்வளவு செலவாகும் என்பது குறித்து சம்பந்தப்பட்ட பதிவாளர் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்