👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459
கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கையின்போது தபால் ஓட்டுகளில் செய்யப்பட்டிருந்த சிறிய தவறுகளால் முடிவுகளே மாறியது. குறிப்பாக ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் தபால் ஓட்டுக்கு ஆசிரியர்கள் வாக்குச்சீட்டுடன் (பேலட் பேப்பர்) இணைக்க வேண்டிய படிவத்தில் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் (அட்டஸ்டேஷன்) கையெப்பம் பெற வேண்டும். ஆனால் அவ்வாறு பெற்றால் பச்சை இன்க் பயன்படுத்தியவரிடம் கையெப்பம் பெற்று இணைத்து விட்டனர். அவர்களிடம் பெறற கையெப்பம் செல்லாது என தேர்தல் அதிகாரி கூறியதால் 250க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் ஓட்டுக்கள் செல்லாத ஓட்டுக்கள் என அறிவிக்கப்பட்டது. இந்த முடிவால் அந்த தொகுதியின் வெற்றி வாய்ப்பே மாறியது.
இந்த முறை ஒரு விரல் புரட்சி நடத்த முடிவு செய்துள்ள ஆசிரியர்கள் அரசு ஊழியர்களில் பலர் தேர்தல் பணி காரணமாக தபால் ஓட்டுப் போட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தபால் ஓட்டு போடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இந்த முறை எந்த பிரச்னைக்கும் இடம் தராமல் ஒன்றுக்கு பல முறை ஓட்டு அளிக்கும் படிவங்களை சரியாக பூர்த்தி செய்து வழங்குமாறு சங்க நிர்வாகிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
குறிப்பாக கடந்த முறை வேட்பாளர் பெயருக்கு நேராக ஒரு ‘டிக்’ செய்யாமல் இரண்டு ‘டிக்’ செய்தது, அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் கையெப்பம் வாங்காதது ஆகியவற்றால் செல்லாது என தெரிவிக்கப்பட்டது. எனவே இந்த விஷயங்களில் கவனம் அதிகம் வேண்டும். தபால் ஓட்டு போடுவது தொடர்பாக சந்தேகங்கள் இருந்தால் அனுபவம் வாய்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் கருத்து கேட்டுக் கொள்ளுங்கள் என தெரிவித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் தபால் ஓட்டும் மிக முக்கியம் என்பதால் கடந்த முறை செய்த அந்த தவறை திரும்பவும் செய்திடு விடாதீர்கள் தலைவரே என அன்பாக வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பான விவரங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்