மாணவர்களின் படிப்புக்கும் ஜாதகத்தில் கிரகங்களின் சஞ்சாரத்திற்கும் எந்த வீட்டில் கிரகங்கள் யாருடன் கூட்டணி அமைத்து அமர்ந்துள்ளன என்பதை பொறுத்தும் படிப்பும் வேலையும் அமையும். பள்ளிப்படிப்பை முடிக்கும் நிலையில் உள்ள பிள்ளைகளின் பெற்றோர்களே ரொம்ப குழம்ப வேண்டாம், உங்கள் பிள்ளைகளின் ஜாதகத்தில் எந்தக் கிரகம் வலிமை பெற்றுள்ளது என்பதையும்,அது எந்த பாவங்களோடுத் தொடர்பு பெற்றுள்ளது என்பதையும் பார்த்து அதற்கேற்ப கல்லூரிகளில் சேர்த்து விடுங்கள். ஒருவர் ஜாதகத்தில் இரண்டாம் பாவம் வலிமைபெற்றால் ஆரம்பநிலைக் கல்வி பள்ளிப்படிப்பு நன்றாக அமையும். நான்காம் பாவம் வலிமைப்பெற்றால் பட்டப்படிப்பு கண்டிப்பாக நல்லபடி பூர்த்தி செய்து பட்டம் வாங்கிடுவார். ஒன்பதாம் பாவம் வலிமை பெற்றால் உயர்கல்வி டாக்டரேட் பட்டம் வாங்க வாய்ப்புள்ளவர். ஐந்தாம் பாவம் வலிமை பெற்றால் சிறந்த கல்விமான்,புதனும்,குருவும் வலிமை பெற்றாலும் படிக்காத மேதை,கல்லூரியில் சென்று படிக்காவிட்டாலும் சுயமாக படித்து அறிவைப் பெறுவார்கள்.
சிலருக்கு டாக்டராக வேண்டும் என்ற ஆசையிருக்கும், சிலருக்கு சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என்று ஆசையிருக்கும், ஐடி படித்து விட்டு இயற்கை விவசாயத்தில் சாதிப்பவர்கள் இன்று இருக்கின்றனர். இது அவர்களின் ஜாதகத்தில் அமைந்துள்ள கிரக நிலையைப் பொறுத்தே அமைகிறது. ஜாதகத்தில் சுப கிரகங்கள் வலிமைப் பெற்றால் மூளைக்கு வேலையைத் தரும் கல்வியையும்,ஒயிட்காலர் ஜாப்பும் பார்க்க வைத்துவிடும், பாவக்கிரகங்கள் வலிமை பெற்றால் டெக்னிக்கல் கல்வியையும்,உடல் உழைப்பைத் தரும் வேலையைத் தந்து உயர்த்தும். படிப்பில் சாதனை செய்யும் யோகம் ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் 2ஆம் இடம் எனப்படும் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமானது அடிப்படைக் கல்வியைப் பற்றி அறிய உதவுகிறது. 4ம் வீடு ஒருவரின் கல்வி அறிவு, திறமை பற்றி அறிய உதவும். 5ஆம் பாவமானது பலமாக இருந்தால் உயர்கல்வி, பட்டக் கல்வி பயிலக்கூடிய யோகம் உண்டாகும்.
மேலும், மேலும் திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் முடியும். 5ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றாலும், 5ல் ஓர் உச்ச கிரகம் அமையப் பெற்றாலும், கல்வி காரகன் புதன் ஆட்சி உச்சம் பெற்று 5ம் அதிபதியும் பலமாக இருந்தாலும் கல்வியில் சாதனை செய்யக்கூடிய யோகம் உண்டாகும். மறைந்த புதன் நிறைந்த கல்வி புதன் அருள் இருந்தால்தான் புத்திக்கூர்மை, சமயோசித புக்தி, நினைவாற்றல் நன்றாக இருக்கும். புதன் ராசி, அம்சம் இரண்டிலும் பலத்துடன் இருப்பது அவசியம். புதன் நீசம் அடையாமலும், 6, 8, 12 ஆகிய இடங்களில் மறையாமல் இருப்பதும் நல்லது. சில ஜாதகங்களில் புதன் நிலை சற்று குறைந்தாலும், மறைந்தாலும் வேறு சில அமைப்பினால் உயர்கல்வி யோகம் வரும்.
பத்திரிகைத்துறை, எழுத்தாளர், பேச்சாளர், விரிவுரையாளர், கணினி அறிவு என அனைத்திலும் ஜொலிக்க முடியும். மறைந்த புதன் நிறைந்த கல்வியைத் தருவார். கல்வியில் சாதிக்க பொதுவாக கல்வி ஸ்தானம் 4ம் இடம் என்பதால், 4ல் பாவ கிரகங்கள் அமையாமல் 4ம் அதிபதி வலு இழக்காமல் இருந்து 5ம் அதிபதி வலுவாக இருந்தால் கல்வியில் எந்தவித தடையும் இன்றி சாதனை செய்வார்கள். 5ம் அதிபதி பலம் பெறுவது மட்டுமின்றி 4,5 க்கு அதிபதிகள் பரிவர்த்தனைப் பெற்றிருந்தாலும் கல்வியில் சாதனை செய்வார்கள். தடையை கடக்க பரிகாரம் 2,4,5 ம் பாவங்கள் கல்விக்குச் சம்பந்தப்பட்ட ஸ்தானம் என்பதால், இந்த பாவங்கள் பலமிழக்காமல் இருப்பதும் பாவ கிரகங்களால் சூழப்படாமலிருப்பதும் நல்லது.
அப்படி பாவ கிரகங்களால் சூழப்பட்டால் கல்வியில் தடைகள் உண்டாகும். குறிப்பாக, சர்பகிரகம் என வர்ணிக்கப்படக்கூடிய ராகு, கேது ஆகிய கிரகங்கள் மேற்கூறிய ஸ்தானங்களில் அமையப் பெற்றால் கல்வியில் தடை உண்டாகும். அதுவும் ராகு அல்லது கேதுவின் திசை கல்வி கற்கக்கூடிய வயதில் நடைபெற்றால், கல்வியில் இடையூறுகள் ஏற்படுகிறது. விநாயகரையும், அம்மனையும் வழிபட தடைகள் நீங்கும்.
ராகு கேது திசைகளில் பாதிப்பு சந்திரனின் நட்சத்திரமான ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கும், செவ்வாயின் நட்சத்திரமான மிருகசீரிஷம், சித்திரை, அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் பட்டக்கல்வி பயிலக்கூடிய வயதில் ராகு திசை வருமம். இந்த ராகு திசை காலங்களில் படிப்பிற்குத் தடைகள் ஏற்படும். கல்வியில் எண்ணம் குறைந்து விளையாட்டுத்தனம் அதிகரிக்கும். புதனின் நட்சத்திரமான ஆயில்யம், கேட்டை ரேவதியில் பிறந்தவர்களுக்கு, பட்டக் கல்வி கற்கக்வடிய வயதில் கேது திசை நடக்கும். இதனால் கல்வியில் தடை, இடையூறுகள் ஏற்படும். குருவின் நிலை உங்கள் பிள்ளைகள் ஜாதகத்தில் குரு பகவான் ஆட்சி,உச்சம்,நட்பு என்ற நிலையில் இருந்தால் குருவின் ஆதிக்கம் உள்ள ஜாதகம்.
கல்வித்துறை,நிதித்துறை,நீதித் துறை, நிர்வாகத்துறை, அறநிலையத்துறை பணிகளுக்கு படிக்க வைத்தால் வெற்றி பெறுவார். குரு 2,4,10 ம் பாவத்திலோ,அதன் அதிபதிகளோடா இணைவு பெற்றிருந்தால் ஆசிரியர்,பேராசிரியர், வழக்கறிஞர், வங்கி பணிக்கு படிக்க வைக்கலாம்.
எந்த துறையில் நிபுணர் ஜாதகத்தில் குரு சூரியன் இணைய மருத்துவம்,எலக்ட்ரிக்கல்,சோலார் எனர்ஜி,தத்துவம்,ஏரோநாட்டிக்,படிக்க வெற்றி உண்டு,பெலிட்டிக்கல் சயின்ஸ் படிக்கலாம். குரு சந்திரன் கூட்டணி அமைந்தால் மனோதத்துவம், மெரைன், ரசாயனம்,உணவுத்துறை,ஆயில்,ஆய்வகத்துறை சார்ந்த கல்வி கற்க வேலை அமையும்.
வங்கியில் வேலை செய்யலாம்
ஜாதகத்தில் குரு செவ்வாய் இணைந்திருந்தால் புள்ளியியல்,நிலஅளவியல்,விஏஓ,ஆர்,அறிவியல்,சிவில்துறை,உடற்கல்வித்துறை, விவசாயம்,கட்டுமானத்துறை,பிபார்ம்,டிபார்ம் ஆகியன படிக்க வெற்றி உண்டு. குருவும் புதனும் இணைய வங்கிப்பணி,கணித ஆசிரியர், ஆடிட்டர், வருமான வரித்துறை,ஊடகத்துறை,பேச்சாளர்,எழுத்தாளர், சிற்பக்கலைஞராக ஆக வாய்ப்பு உண்டு.
குருவுடன் சனி கூட்டணி ஜாதகத்தில் குரு சனி கூட்டணி போட்டு அமைந்திருந்தால் பூமிக்கு கீழேஉள்ள தாதுக்கள்,ஆயில்,சார்ந்த ஆய்வகப் படிப்பு படிக்கலாம்,பண்ணை,கால்நடை சார்ந்த படிப்புகள் வெற்றி தரும். குரு ராகு இணைய எலக்ட்ரானிக்ஸ்,சிமென்ட், ஓடு, டைல்ஸ், ஏரோநாட்டிக்ஸ்,விண்வெளி ஆய்வு கல்வி பலன் தரும். குரு உடன் கேது இணைய ஏற்றுமதி, இறக்குமதி, தத்துவம், மருத்துவம்,சார்ந்த கல்வி படிக்க வைக்கலாம்.
சினிமா துறை படிப்பு குரு சுக்கிரன் இணைய, நேருக்கு நேர் பார்த்தால் கேட்டரிங், காஸ்மெட்டிக், ஆடைவடிவமைப்பு, கார்மென்ட்ஸ்,ஆபரணம், புட் ப்ராசசிங்,பால் பண்ணை, வெட்னரி, அழகுகலை, சினிமா, ஊடகத்துறை,விசுவல் கம்யூனிகேசன் சார்ந்த கல்வி படிப்பு வெற்றியைத் தரும்.
விநாயகரை வணங்க நன்மைகள் மாணவர்களுக்கு தேர்வு நேரத்தில் ஞாபகசக்தி அதிகரிக்க காலையில் விநாயகரை வணங்கி அகவல் படிக்கலாம். தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமை வணங்க வேண்டும். மதுரை மீனாட்சி புதன் பரிகார தலமாகும். புதன்கிழமை பிள்ளைகளை அழைத்துச்செல்லலாம். புதன்கிழமையும், திருவோண நட்சத்திரமும் சேரும் தினத்தில் ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை சாற்றி வழிபடலாம். கல்வி, வித்தை அருளும் புதன் பகவானை வணங்கலாம். பெருமாளையும் புதன்கிழமைகளில் வணங்கலாம். திருவெண்காடு சென்று புதன் பகவானை வணங்க நன்மைகள் நடக்கும். கூத்தனூர் சென்று கல்விக் கடவுளாம் சரஸ்வதியை வணங்குவது நல்ல பலன் தரும்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்